புதிய அவதாரம்... புது டெக்னிக்... ஆஸ்திரேலியாவின் கணிப்புகளை... சுக்கு நூறாக நொறுக்கிய நட்டு!.. வாயடைத்துப் போன இந்திய அணி!!.. மாஸ் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் பவுலிங் செய்து வரும் விதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்திய அணியின் முக்கியமான பவுலர்கள் பும்ரா, அஸ்வின், ஜடேஜா காயம் அடைந்த நிலையில் இளம் வீரர்களை நம்பி இந்திய அணி களமிறங்கி உள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில் தற்போது நடராஜன் அறிமுகம் ஆகியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே நடராஜன் தற்போது சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.
இந்த போட்டியின் தொடக்கத்தில் நடராஜன் பவுலிங் செய்த விதம் பெரிய அளவில் ஈர்க்கும்படியாக இல்லை. டெஸ்ட் போட்டி என்பதாலோ என்னவோ நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. நடராஜனின் பவுலிங் நல்ல லென்த் மற்றும் லைனில் இருந்தது. அதில் நடராஜன் எதுவும் தவறு செய்யவில்லை.
ஆனால் நடராஜனின் பவுலிங்கில் முதல் பாதியில் பெரிய அளவில் வேரியேஷன் இல்லை. அதோடு ரன்னை கட்டுப்படுத்தும் வகையில் நடராஜன் பவுலிங் செய்தாரே ஒழிய, விக்கெட் எடுக்கும் வகையில் நடராஜன் பவுலிங் செய்யவில்லை. முதல் 50 ஓவர்களில் நடராஜன் போட்ட பெரும்பாலான ஓவர்கள் விக்கெட் எடுக்கும் வகையில் இல்லை.
இந்த நிலையில்தான் நடராஜன் போக போக தனது பவுலிங் லென்தை மாற்றினார். திடீரென ஷார்ட் பந்துகளை நடராஜன் வீச தொடங்கினார். வரிசையாக ஒரே ஓவரில் நிறைய ஷாட் பந்துகளை நடராஜன் வீச தொடங்கினார். முக்கியமாக மார்னஸ், வேட் இருவரும் ஷாட் பந்தில் அவுட்டாவார்கள் என்பதால் அவர்களுக்கு மாறி மாறி ஷாட் பந்துகளை நடராஜன் வீசினார்.
அதிலும் இவர் டீ பிரேக்கிற்கு பின் வித்தியாசமாக பவுலிங் செய்தார். விளைவு வரிசையாக அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது. வேட், மார்னஸ் இருவரும் அவுட் ஆனார்கள். இரண்டு பேருமே நடராஜனின் ஷாட் பந்தில்தான் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள்.
அதிலும் மார்னஸ் அவுட்டான விதம் அவருக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் அழுத்தம் காரணமாக நிறைய லோ பால், ஸ்லோ பந்துகளை நடராஜன் வீசி வந்தார். ஆனால் போக போக நடராஜன் தனது பழைய ஸ்டைலை மீட்டு கொண்டு வந்தார்.
இதன் பலனாக நடராஜன் 2 விக்கெட் எடுத்துள்ளார். இதனால் நாளைய போட்டியிலும் நடராஜன் பவுலிங் மேலும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.