எல்லை மீறிய பிராங்க்.. கடுப்பான சஞ்சு சாம்சன்.. அதிரடி முடிவெடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசஞ்சு சாம்சனின் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று ராஜஸ்தான் அணியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட விவகாரம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ப்ராக்டீஸ்ல தோனியை பார்த்ததும் வேகமாக வந்த கோலி.. ரசிகர்களை நெகிழவைத்த வீடியோ..!
ஐபிஎல் 2022
உலக கிரிக்கேட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஐபிஎல் தொடரின் இந்த வருட போட்டிகள் தொடர் மார்ச் 26 ஆம் தேதியான இன்று துவங்கி வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது மகாராஷ்டிராவில் தங்கி இருக்கின்றன. இன்று நடைபெற இருக்கும் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
சஞ்சு ட்வீட்
இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனின் படத்திற்கு தோடு, டர்பன், கண்ணாடி வைத்து புகைப்படம் ஒன்று வெளியானது. அதுவும் ராஜஸ்தான் அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில். இந்த புகைப்படம் இணையங்களில் வைரலானது.
இதனை அடுத்து இதுகுறித்து சஞ்சு வெளியிட்ட ட்வீட்டில்,"நண்பர்களுக்குள் இது போல் செய்வது பரவாயில்லை, ஆனால் அணிகள் தொழில் நேர்த்தியுடன் இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கையும் அவர் UNFOLLOW செய்துள்ளார்.
நடவடிக்கை
சஞ்சு சாம்சன் தனது எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்த சில மணி நேரங்களில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் புது அறிவிப்பினை வெளியிட்டது. அந்த அறிவிப்பில்,"இன்று நடந்த ஒரு சில சம்பவங்களால் எங்களின் சமூக வலைதள குழுவை மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளோம். மேலும் ஹைதராபாத் அணிக்கு எதிரான எங்களின் முதல் போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறோம். மேலும் எங்கள் அணியின் டிஜிட்டல் குழுவை மாற்றி அமைப்பது பற்றி ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். அதுவரை எங்கள் அணி சம்பந்தமான தகவல்களை ரசிகர்களுக்கு தெரிவிக்க தற்காலிகமான ஒரு முடிவு எடுக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் சர்ச்சைக்குரிய புகைப்படமும் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சஞ்சுவின் புகைப்படத்தை வெளியிட்ட அட்மினை அந்த அணி நிர்வாகம் பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் கிளம்பின.
பிராங்கா?
சஞ்சு சாம்சன் படத்தை எடிட் செய்து வெளியிட்ட விஷயம் தீயாய் பரவ, அதற்கு அந்த அணி நிர்வாகம் கொடுத்த அறிக்கை அதில் எண்ணெய் ஊற்றியது. இந்த பரபரப்பிற்கு இடையில் மேலும் இரண்டு வீடியோவை இறக்கிவிட்டுள்ளது ராஜஸ்தான் அணி. முதல் வீடியோவில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒவ்வொரு வீரரிடம் கெஞ்சுவதை போன்றும் 2 வது வீடியோவில் புதிய அட்மினுக்கான நேர்காணல் நடப்பது போன்று நகைச்சுவையாக வீடியோவை அந்த அணி வெளியிட்டு இருக்கிறது. இதுல எது உண்மை? எது பிராங்க் என்பது கிரிக்கெட் ரசிகர்களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
One last time.
PS: Love you, @IamSanjuSamson. 💗 pic.twitter.com/vvYalpFPKI
— Rajasthan Royals (@rajasthanroyals) March 25, 2022
This prank was incomplete without a fake audition. 😂
P.S. Tough luck, @yuzi_chahal 👀#RoyalsFamily | #HallaBol pic.twitter.com/aM3cWJqucv
— Rajasthan Royals (@rajasthanroyals) March 26, 2022
'எதிர்பாராமல் வெடித்த எலெக்ட்ரிக் பைக்' - உயிரிழந்த தந்தை, மகள்! - வேலூரில் சோகம்

மற்ற செய்திகள்
