"மேட்ச்-னா இப்படி இருக்கணும்".. போடு நம்ம சச்சின் பகிர்ந்த செம்ம வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பெண்களும் ஆண்களும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சச்சின்
இந்திய கிரிக்கெட் வரலாற்றை சச்சின் டெண்டுல்கரை தவிர்த்து எழுதிவிட முடியாது. பல அபார சாதனைகளை படைத்து இந்திய நாட்டிற்கு பல பெருமைகள் சேர்த்தவர். 1973 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக விளையாடினார்.
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலாக 200 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். அதே போல் சர்வதேச போட்டிகளில் நூறு முறை சதம் அடித்த பெருமையும் இவரையே சேரும்.
சச்சின் டெண்டுல்கருக்கு 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் விளையாட்டு வீரர்களில் முதன் முதலாக பாரத ரத்னா விருது வாங்கியவர் என்ற பெருமையையும் சேர்த்துக் கொண்டார். மேலும் இவரது சாதனைகளை பாராட்டி 1994 ஆம் ஆண்டு அர்ஜூனா விருதும், 1997 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது. அதே போல் 1999 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2008 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது.
இவ்வாறு பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டார்.
பெண்கள் அணி..
பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே இந்தியாவிற்கென்று கிரிக்கெட் அணி இருந்தது. ஆனால் 1973 ஆம் ஆண்டு தான் இந்திய பெண்கள் கிரிக்கெட் அஸோஸியேஷன் தொடங்கப்பட்டது. பின்பு 1976 ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய பெண்கள் அணி முதன்முதலில் களத்தை கண்டது. எனினும் கிரிக்கெட் போட்டிகளில் ஆண்களை மட்டுமே கொன்டாடுகிறார்கள் என விமர்சனங்கள் பல எழுந்து வருகின்றன.
ட்வீட் ..
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு ஆண் பேட் செய்ய ஒரு பெண் பௌலிங் செய்கிறார். இறுதியில் அந்த ஆணை விக்கெட் இழக்க செய்கிறார் அந்தப்பெண். இந்த வீடியோவை டெண்டுல்கர் பகிர்ந்து அதில் “ஆணும் பெண்ணும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை பார்ப்பது அற்புதமாக உள்ளது. விளையாட்டு என்பது சமத்துவத்துக்குரியதாக தான் இருக்க முடியும். சமீபத்தில் இந்த காட்சியை மும்பை எம் ஐ ஜி கிளப்பில் பார்த்தேன்.வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள இந்த டிவீட் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Wonderful to see girls & boys play a cricket match together. Sport can be a great enabler for equality.
Saw this recently in MIG Club Mumbai. Well done!#CricketTwitter pic.twitter.com/iEAoCn3PV7
— Sachin Tendulkar (@sachin_rt) March 25, 2022