யார் நீ? என்ன பண்ணிட்டு இருக்க?.. கத்தியபடி LIVE-ல இருந்து எந்திரிச்சு போன ஹர்ஷா போக்லே.. பரபரப்பான ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே நேற்று இன்ஸ்டாகிராம் நேரலை நிகழ்ச்சியில் இருந்து திடீரென்று எழுந்து போனார். இது ரசிகர்களை பதட்டமடைய வைத்தது. இந்நிலையில், அதற்கான விளக்கத்தை ஹர்ஷா அளித்திருக்கிறார்.

ஹர்ஷா போக்லே
60 வயதான ஹர்ஷா போக்லே பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஆவார். இவரது தனித்துவமான பேச்சாற்றல் காரணமாக இவரை பல லட்ச மக்கள் சமூக வலைத் தளங்கள் வாயிலாக பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை நிகழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவருடன் ஹர்ஷா பேசிக்கொண்டு இருந்தார்.
சத்தம்
நேரலை நிகழ்ச்சியில் ஹர்ஷா பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென அவர் யாரையோ கோபமாக கேள்வி கேட்டார். அப்போது அவர்," யார் நீ? என்ன செய்கிறாய்?" என கேட்டபடி நேரலையில் இருந்து எழுந்து சென்றுவிட்டார். கேமராவும் வேறுபக்கம் திரும்பியதால் அங்கே என்ன நடக்கிறது என்பதை நேரலையை பார்த்துக்கொண்டிருந்தவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.
நேரலையில் ஹர்ஷாவுடன் பேசிக்கொண்டிருந்த நபர், 'ஹர்ஷா சார் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?' என கேட்க, எதிர் தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. இதனை அடுத்து என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ரசிகர்கள் 'என்ன ஆனது' என கேள்விகளை எழுப்பினர்.
விளக்கம்
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஹர்ஷா போக்லே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். இந்த விஷயம் குறித்து ஏற்கனவே முடிவெடுத்து, அதன்படியே நேரலையில் இருந்து எழுந்து சென்றதாக ஹர்ஷா தெரிவித்திருக்கிறார். மேலும் ஹர்ஷா ரசிகர்களிடையே இதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் " நான் நலமாக உள்ளேன். உங்களை கவலையில் ஆழ்த்தியதற்கு மன்னிக்கவும். உங்களது அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி. நான் எதிர்பார்த்ததை விட இது வைரலாகி விட்டது. இதுவும் ஒருவகையான கற்றல் தான். இது வேறு ஏதோவொன்றிற்கு இட்டுச் செல்வதாக இருந்தது. மன்னிக்கவும் மற்றும் சியர்ஸ்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஹர்ஷாவின் மனைவியும் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். அவர்," நண்பர்களே ஹர்ஷா நலமாக இருக்கிறார். இது ஒரு ப்ரோமோ. இது வைரலாகி பலரையும் கவலையடைய செய்துவிட்டது. உங்களுடைய அன்புக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேரலையில் இருந்து திடீரென கத்தியபடி ஹர்ஷா போக்லே எழுந்து சென்ற வீடியோ வைரலாக பரவிய நிலையில், அது திட்டமிட்டே நடத்தப்பட்டது என அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். "நல்லா கிளப்புறீங்கய்யா பீதிய" என்பதுதான் பலரது மைண்ட் வாய்சாக இருந்து வருகிறது.
What just happened? Is @bhogleharsha okay???
I NEED ANSWERS. pic.twitter.com/TrhU55gIxj
— JD (@JaidevNandi) March 24, 2022
“சென்னையும்.. ‘தல’ தோனியும்..” சேவாக் போட்ட ஒரே ஒரு ட்வீட்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

மற்ற செய்திகள்
