ப்ராக்டீஸ்ல தோனியை பார்த்ததும் வேகமாக வந்த கோலி.. ரசிகர்களை நெகிழவைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சியின் போது மஹேந்திர சிங் தோனியை பார்க்க வேகமாக வந்த விராட் கோலி அவரை கட்டிப்பிடிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

'எதிர்பாராமல் வெடித்த எலெக்ட்ரிக் பைக்' - உயிரிழந்த தந்தை, மகள்! - வேலூரில் சோகம்
ஐபிஎல்
உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து களம் காண்கிறது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி கடந்த ஐபிஎல் தொடரின்போது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து அந்த அணிக்கு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டூபிளெஸ்ஸிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவந்த தோனி அந்த பொறுப்பை, ரவீந்திர ஜடேஜாவிற்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சென்னை அணியின் கேப்டனாக தோனியே இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி
கொரோனா காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மஹாராஷ்டிராவில் உள்ள 3 மைதானங்களில் மட்டுமே நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, அனைத்து அணி வீரர்களும் தற்போது மஹாராஷ்டிராவில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று DY ஸ்டேடியத்தில் நடைபெற்ற பயிற்சியில் பெங்களூர் மற்றும் சென்னை அணி வீரர்கள் கலந்துகொண்டனர்.
வேகமாக வந்த கோலி
இதனை அடுத்து நேற்று மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விராட் கோலி, அருகே தோனி இருப்பதை பார்த்ததும் வேகமாக நடந்துவந்து அவருடன் கைகுலுக்கினார் அதன் பின்னர் இருவரும் கட்டியணைத்துக்கொண்டனர். இதனை அங்கிருந்த ரசிகர்கள் பலர் நெகிழ்ச்சியோடு பார்த்தனர்.
ரசிகர் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து வெளியிட, இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Virat kohli wasn't Leaving Dhoni 💛😂#WhistlePodu | #IPL2022 pic.twitter.com/4b71lqOYru
— CSK Fans Army™ 🦁 (@CSKFansArmy) March 25, 2022
புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய பத்திரிக்கையாளர்.. காலைல வீட்டு வாசல்ல காத்திருந்த அதிர்ச்சி..!

மற்ற செய்திகள்
