ஆல் ஏரியாலயும் அய்யா 'கில்லிடா'.. டென்னிஸ் களத்தில் MS தோனி.. வைரல் புகைப்படங்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவராக வலம் வந்தவர் எம்.எஸ். தோனி. அவரது தலைமையில் இந்திய அணி, டி 20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை உள்ளிட்ட அனைத்தையும் வென்று பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது.

Also Read | 2023 பட்ஜெட் : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் முக்கிய ஆலோசனை
சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்பட்டு வந்த நிலையில், தொடரின் பாதியில் மீண்டும் கேப்டனாக தோனி செயல்பட்டார்.
தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலமும் டிசம்பர் 23 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், சென்னை அணியின் தேர்வு எப்படி இருக்கும் என்பதையும் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 9 ஆவது இடம் பிடித்து வெளியேறியதால் நிச்சயம் அடுத்த சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே பட்டையை கிளப்பும் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், தோனி டென்னிஸ் ஆடும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. பொதுவாக, தோனியை சுற்றி என்ன விஷயங்கள் நடந்தாலும் அவை உடனடியாக ரசிகர்கள் கவனத்தை பெறுவதுடன் மட்டுமில்லாமல், ட்ரெண்டிங் ஆகவும் மாறும். அப்படி தான் தற்போது கூலாக டென்னிஸ் பேட்டுடன் கோர்ட்டில் தோனி வலம் வரும் புகைப்படங்கள், பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
