'என்னது!... இது எப்போ நடந்துச்சு?!!'... 'கோலியை புகழ்ந்துதள்ளிய சூர்யகுமார் யாதவ்!!!'... 'ட்வீட்டை தேடிப்பிடித்து வைரலாக்கும் ரசிகர்கள்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா பாதிப்பு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்புக்கு சற்றும் பஞ்சமின்றி நடைபெற்றுவரும் நிலையில், மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் போட்டியில் மும்பை பெங்களூரை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, பிளேஆஃபில் தன் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மும்பையின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெறாதது பெரும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில், மும்பைக்கு எதிரான போட்டியின்போது ஆர்சிபி கேப்டன் விராட் கோலி சூர்யகுமாரை மைதானத்தில் முறைத்துப் பார்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது சூர்யகுமாரின் பழைய ட்வீட்டுகள் சில வைரலாகி வருகின்றன. அதில் அவர் கோலியைப் புகழ்ந்து தள்ளியிருப்பதே அதற்கு காரணமாகும்.
சூர்யகுமார் யாதவ் 4 ஆண்டுகளுக்கு முன்பு 2016ல் பகிர்ந்த ட்வீட் ஒன்றில், "மிகவும் அழுத்தம் நிறைந்த, பெரிய பொறுப்பு இருக்கும் இடத்தில் அவர் இருக்கிறார். இந்தியாவுக்காக மூன்றாம் இடத்தில் கடவுள் பேட் செய்ய வந்ததை நான் பார்த்திருக்கிறேன்" எனக் கூறியுள்ளார். அதேபோல மற்றொரு ட்வீட்டில், "விராட் கோலி அவருடைய பயணத்தில் உலகின் உச்சத்தை அடைய ஒரு வார்த்தை யாராவது சொல்ல முடியுமா?" எனக் கேட்டுள்ளார். அந்த நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி பேட்டிங் தரவரிசையின் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
In the big SHOES. Where there is pressure dr is him. I hav seen GOD walking at Number 3 for India to bat @imVkohli pic.twitter.com/zoRfXtillE
— Surya Kumar Yadav (@surya_14kumar) March 20, 2016
For a reason. One word for his journey to reach top of the world. Anyone ? pic.twitter.com/89iZIbByhi
— Surya Kumar Yadav (@surya_14kumar) December 5, 2019