தயவுசெஞ்சு ‘வின்’ பண்ணிருங்கப்பா.. கெஞ்சி கேட்ட அணிக்கு ‘சிஎஸ்கே’ கொடுத்த பதில்ல பார்த்தா ‘சிரிப்பு’ கன்பார்ம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் 49-வது லீக் போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடைரஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா 87 ரன்கள் அடித்து அசத்தினார். சென்னை அணியை பொருத்தவரை லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளும், மிட்சல் சான்ட்னர், ஜடேஜா, கரன் ஷர்மா தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்த நிலையில் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது. அதனால் சென்னை அணிக்கு இது முக்கியமான போட்டி இல்லை என்றாலும், சென்னை அணியை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இது மிக முக்கியமான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை கெடுத்து கொள்ளும். அதே போல் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் போன்ற அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் கொல்கத்தா அணி இன்று தோற்றாக வேண்டும்.
இந்த ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான தகுதியை தக்கவைத்து கொள்ளும். அதனால் இந்த ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற வேண்டுமென ‘விசில் போடு’ என மறைமுகமாக ராஜஸ்தான் அணி கோரிக்கை வைத்துள்ளது. இதனை ராஜஸ்தான் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
— Chennai Super Kings (@ChennaiIPL) October 29, 2020
+1 😬 pic.twitter.com/pwrqMhMyLu
— SunRisers Hyderabad (@SunRisers) October 29, 2020
இதற்கு சென்னை அணி நடிகர் வடிவேலுவின் ரியாக்ஸனை பதிலாக கொடுத்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தானுக்கு ரிப்ளை கொடுத்துள்ளது.

மற்ற செய்திகள்
