பாதியில் எழுந்து சென்ற ‘ரோஹித்’.. சண்டைக்குப்போன ‘பாண்ட்யா’.. கோபமாவே இருந்த ‘கோலி’.. அப்டி நேத்து என்னதான் நடந்தது..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா பாதி ஆட்டத்திலேயே எழுந்து டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றுவிட்டார்.

மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 166 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இப்போட்டியில் காயம் காரணமாக ரோஹித் ஷர்மா விளையாடவில்லை. அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதால் கடந்த 3 போட்டிகளாக அவர் ஆடாமல் இருக்கிறார். இதன்காரணமாக தற்போது ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியிலும் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை.
நேற்றைய போட்டியில் ஆட்டத்திற்கு இடையே அடிக்கடி மைதானத்திற்கு வந்த ரோஹித் ஷர்மா, மும்பை வீரர்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கி வந்தார். ஆனால் சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் ஷர்மா இதுபோல் மைதானத்துக்குள் வந்து அறிவுரை வழங்கவில்லை. அப்படி இருக்கையில் நேற்று விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் ஏன் ரோஹித் ஷர்மா மைதானத்துக்குள் அடிக்கடி வந்தார்? இது ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத கோபத்தின் வெளிப்பாடா? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ரோஹித் ஷர்மா மீது இருந்த கோபத்தை நேற்று விராட் கோலி மும்பை வீரர்கள் மீது காட்டினார் என்று கூறப்படுகிறது. கோலிதான் ஏதோ அரசியல் செய்துவிட்டார் என்றும் அவரால்தான் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை என்றும் ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
அதேபோல் சூர்யாகுமார் யாதவும் அணியில் இடம்பெறாதது குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடுமையான விரக்தியில் இருந்த கோலி நேற்று மைதானத்தில் சற்று கோபமாகவே காணப்பட்டார்.
தொடர் விமர்சனங்கள் காரணமாகதான் சூர்யாகுமார் யாதவ் மீது கோலி கோபத்தை காட்டினார் என்று கூறப்படுகிறது. அதேபோல் மும்பை வீரர்களும் தொடர்ந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதில் க்றிஸ் மோரிஸ் உடன் ஐபிஎல் விதிகளை மீறும் அளவிற்கு ஹர்திக் பாண்டியா சண்டை போட சென்றார். அதேபோல் குர்ணல் பாண்ட்யாவின் விக்கெட்டை எடுத்ததும் பெங்களூரு வீரர்கள் கொஞ்சம் அதிகமாகவே கத்தினார்கள்.
High class innings from a high class player absolutely magnificent #SuryakumarYadav
That's the way u deal 💯#MIvsRCB pic.twitter.com/8VuitIpHrK
— َََََََََ (@Aryanjuly20) October 28, 2020
மும்பை அணியின் நடப்பு கேப்டனான பொல்லார்டும் மைதானத்தில் கோபமாக காணப்பட்டார். இதனால் நேற்றைய போட்டி முழுக்கவே பரபரப்பாக காணப்பட்டது. கடைசியாக மும்பை அணி வெற்றியை நெருங்கியதை அறிந்த ரோஹித் ஷர்மா பாதியிலேயே எழுந்து டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றுவிட்டார். இது மைதானத்தில் கோலி வெளிப்படுத்திய கோபமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
