போடு.. அமெரிக்காவையே திரும்பி பார்க்க வச்ச நாட்டு நாட்டு பாடல்.. இயக்குநர் ராஜமௌலி பகிர்ந்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Mar 21, 2023 04:06 PM

இயக்குநர் ராஜமௌலி பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Rajamouli shares video of Nattu Nattu song in plays in New jersey

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | 3 சவரன் தங்க செயினை காணோம்.. வீடு முழுசும் தேடுன அப்புறம் நாய் கொடுத்த ஷாக்.. அரண்டு போய்ட்டாரு மனுஷன்..!

RRR

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.

Rajamouli shares video of Nattu Nattu song in plays in New jersey

Images are subject to © copyright to their respective owners.

நாட்டு நாட்டு

பிரபல இசையமைப்பாளர் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது. இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். அது முதல் ஆஸ்கரை வெல்லுமா நாட்டு நாட்டு பாடல்? என ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்தது. கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றனர்.

வீடியோ

இந்நிலையில் உலகின் மிகப்பெரும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா உடன் கைகோர்த்து மிக பிரம்மாண்டமான முறையில் நாட்டு நாட்டு பாடல் இசைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட டெஸ்லா கார்கள் RRR வடிவில் அணிவகுத்து நிற்க, பாடலுக்கு ஏற்றபடி கார்களில் விளக்குகள் ஒளிர செய்யப்பட்டிருக்கின்றன. இதனை ஏராளமானோர் கண்டுகளித்திருக்கின்றனர்.

Rajamouli shares video of Nattu Nattu song in plays in New jersey

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், இயக்குநர் ராஜமௌலி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில், நாட்டு நாட்டு பாடலுக்காக செய்யப்பட்ட இந்த உழைப்பை கண்டு வியப்படைந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், இதை சாத்தியமாக்கியவர்களுக்கு நன்றியையும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | தோனிக்கு இந்த IPL சீசன் தான் கடைசியா?.. வாட்சன் கொடுத்த ரிப்ளை.. கொண்டாடும் Fans..!

Tags : #SS RAJAMOULI #NATTU NATTU SONG #PLAYS #NEW JERSEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajamouli shares video of Nattu Nattu song in plays in New jersey | World News.