'ஒருநாள் போட்டிக்கு டீம் ரெடி...' 'ஆனா ஒருத்தர் மட்டும் மிஸ்ஸிங்...' 'ஐபிஎல்-யும் விளையாடுறது டவுட் தான்...' - இங்கிலாந்து அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் காயம் ஏற்பட்டதன் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்படவில்லை.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடர் சனிக்கிழமை (20-03-2021) நிறைவடைந்தது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் முழங்கையில் ஏற்பட்ட காயம் அதிகமானது. இதனால், இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாக அவர் உடனடியாக பிரிட்டன் திரும்புகிறார்.
இந்தியாவுடனான ஒருநாள் போட்டிக்காக இன்று (21-03-2021) அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் வீரர்கள் பின்வருமாறு,
இயான் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோனாதன் பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், டாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், மேட் பார்கின்சன், அடில் ரஷித், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே, மார்க் வுட் போன்றவர்கள் முதன்மை வீரர்களாக களம் இறங்குகின்றனர்.
மேலும் கூடுதல் வீரர்களாக ஜேக் பால், கிறிஸ் ஜோர்டன், டேவிட் மலான் ஆகியோரும் இங்கிலாந்து அணியுடன் சேர்ந்து விளையாட உள்ளனர்.
காயம் காரணமாக ஒருநாள் போட்டி தொடரில் விளையாடாத ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.