VIDEO: இப்படியொரு ‘ரன் அவுட்’-ஐ கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டாரு.. அசால்ட்டா அவுட்டாக்கிய நியூஸிலாந்து வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்து வீரர் ஒருவர் காலால் பந்தை தட்டி ரன் அவுட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த சனிக்கிழமை டுனெடின் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி நியூஸிலாந்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று (23.03.2021) கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தமீம் இக்பால் 78 ரன்களும், மிதுன் 73 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து அணி, 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் 110 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.
It's the golden a̶r̶m̶ boot!@JimmyNeesh with some tidy footwork to run out Tamim Iqbal for a well made 78.
Tune in live, only on Spark Sport #NZvBAN ⭕️🏏 pic.twitter.com/pVx480PPpz
— Spark Sport (@sparknzsport) March 23, 2021
இந்த நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் தனது காலால் பந்தை தட்டிவிட்டு, வங்கதேச வீரர் தமீம் இக்பாலை ரன் அவுட் செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
CONTROVERSY!
Kyle Jamieson is adjudged to not have full control of the ball before grounding it in his follow through. Out decision reversed
What do you think? Out or not out? pic.twitter.com/qloGspBpBO
— Spark Sport (@sparknzsport) March 23, 2021
முன்னதாக தமீம் இக்பால் 34 ரன்கள் எடுத்திருந்தபோது நியூஸிலாந்து பந்துவீச்சாளர் கைல் ஜேமீசனிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் இது சாஃப்ட் சிக்னல் சர்ச்சையை கிளப்பவே, மூன்றாவது அம்பயர் இதற்கு நாட் அவுட் கொடுத்தார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.