'இத' பார்க்குறதுக்கு எப்படி இருக்கு தெரியுமா?.. இங்கிலாந்தை சுருட்டிய கோலி-ரோகித் COMBO குறித்து... முன்னாள் வீரர் கொடுத்த செம்ம ஐடியா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Mar 22, 2021 04:35 PM

இங்கிலாந்துடனான 5வது தொடரில் சிறப்பாக ஆடியது மூலம் ரோகித் - கோலியை முக்கிய ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டுள்ளார் மைக்கேல் வாகன்.

michael vaughan compare kohli rohit sharma sachin sehwag

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20ல் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ரோகித் - கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கியதே பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், இருவரின் பார்ட்னர்ஷிப்பையும் சச்சின் - சேவாக் ஜோடியுடன் ஒப்பிட்டு அதற்கான விளக்கத்தையும் கூறியுள்ளார் மைக்கேல் வாகன்.

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 224 ரன்களை எடுத்தது. இதற்கு முக்கிய காரணம் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி மற்றும் துணைக்கேப்டன் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கியதுதான். சிறப்பாக ஆடிய இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் 94 ரன்களை குவித்தனர். ரோகித் சர்மா 64 ரன்களும் விராட் கோலி 80 ரன்களும் விளாசினர். இவர்களின் ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. 

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், "இந்த போட்டியை பார்க்கும் போது எனக்கு சேவாக் - சச்சின் ஜோடியை பார்ப்பது போல் இருந்தது. சச்சின் நிச்சயம் நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் தருவார் என நம்பி சேவாக் பந்தை துவம்சம் செய்வார்.

அதே போல நேற்று ரோகித் சர்மா தொடக்கம் முதல் அதிரடி காட்ட, மறுமுனையில் விராட் கோலி, சச்சினை போன்று ஆஃப் சைட், ஃப்ரண் ஃபூட் ஷாட்களை ஆடி நிலைத்து நின்றார். இந்த திட்டத்தை சாஸ்திரி மற்றும் கோலி மிகுந்த தடுமாற்றத்திற்கு பிறகு செயல்படுத்தியுள்ளனர்" என தெரிவித்தார். 

இந்த போட்டியில் 3வது வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறங்கி 32 ரன்களை குவித்தார். இதுகுறித்து பேசிய வாகன், சூர்யகுமார் முதல் விக்கெட்டிற்கு சிறப்பாக ஆடினார். அவர் முழுக்க முழுக்க சர்வதேச போட்டியை ஆட தயாரானவர். எனவே, விராட் கோலி அவருக்காக எதையும் செய்ய வேண்டும். அவரை 4வது வீரராக களமிறக்காமல் 3வது வீரராக களமிறக்கினால் சிறப்பாக இருக்கும். 

இதுகுறித்து பேசிய கோலி, "நான் ஐபிஎல் தொடரிலும் இனி ஓப்பனிங் இறங்க உள்ளேன். நான் வெவ்வேறு இடங்களில் களமிறங்கி பேட் செய்திருக்கிறேன். ஆனால், இந்த ஆட்டத்தில் நானும் ரோகித்தும் மிடில் ஆர்டரில் சரியான ஆட்டத்தைக் கொடுத்திருப்பதாக உணர்கிறேன். அவருடன் தொடர்ந்து சேர்ந்து விளையாட விரும்புகிறேன். இந்த ஆட்டமுறையை வரும் போட்டிகளிலும், உலகக்கோப்பை போட்டியிலும் தொடர்வோம் என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Michael vaughan compare kohli rohit sharma sachin sehwag | Sports News.