'கொல்கத்தா' வீரர்களுக்கு உறுதியான 'கொரோனா'.. "2 பேரும் இப்போ எப்படி இருக்காங்க?.." 'KKR' தலைமை அதிகாரி வெளியிட்ட 'தகவல்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன் தற்போது, இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெறவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டது, ஐபிஎல் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்றிரவு போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொல்கத்தா அணியைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி (Varun Chakravarthy) மற்றும் சந்தீப் வாரியார் (Sandeep Warrier) ஆகியோர், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டனர்.
அது மட்டுமில்லாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், வீரர்களில்லாமல், நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கும், கொரோனா பரவியதாக தகவல் வெளியாகி, பின்னர் அவர்களுக்கு நெகடிவ் என்றும் கூறப்பட்டது.
இதனால், ஐபிஎல் தொடர்கள் நடைபெறுமா என்பது பற்றியான கேள்விகளும் அதிகம் எழுந்தது. இதனிடையே, வருண் மற்றும் சந்தீப் ஆகியோர், உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது பற்றி, கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் (Venky Mysore) கருத்து தெரிவித்துள்ளார். 'இது சற்று கடினமான நேரம் தான். ஆனால், வருண் மற்றும் சந்தீப் ஆகியோர், தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களது அணிக்கு தேவையான அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பாக எடுத்துள்ளோம். சந்தீப் வாரியருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை. அவர் நன்றாக இருக்கிறார். மறுபக்கம், வருண் சில அறிகுறிகளுடன் தான் உள்ளார். ஆனால், நேற்று இருந்ததை விட, இன்று நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். இருவரும் சிறப்பாக தயாராகி வருகிறார்கள்' என வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
