'யோவ்'... 'நீ தான் யா மனுஷன்'... 'நாய்'காக உயிரை பணயம் வைத்து எடுத்த ரிஸ்க்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Aug 06, 2019 03:07 PM

ஆற்றில் சிக்கிய நாயை உயிரை பணயம் வைத்து மீட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Group of boys formed human chain and rescued a dog video goes viral

மிருகங்களில் நாய் மனிதனுக்கு மிகவும் நெருக்கமான ஒரு உயிரினமாகும். பல நேரங்களில் மனிதன் ஆபத்தில் சிக்கும் போது நாய்கள் காப்பாற்றிய பல செய்திகளை படித்திருப்போம். தற்போது ஆற்றில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை இளைஞர் ஒருவர் மீட்ட வீடியோ பலரையும் நெகிழ செய்துள்ளது. கரைபுரண்டு ஓடும் ஆற்றின் நடுவே நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. அதனால் எந்த பக்கமும் செல்ல முடியமால் தவித்து கொண்டிருந்தது. இதனை கவனித்த இளைஞர் ஒருவர் நாயினை மீட்பதற்காக ஆற்றில் இறங்கினார்.

நாயை தூக்கிய இளைஞர் அதனை கரைக்கு கொண்டு செல்ல முயற்சித்தார். ஆனால் அந்த இளைஞரால் அது முடியமால் போனது. இதை கவனித்த கரையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், ஆற்றில் நின்று கொண்டிருந்த இளைஞருக்கு உதவ முன் வந்தார்கள். அப்போது கரையில் இருந்த இரும்பு வேலியை இளைஞர் ஒருவர் பிடித்து கொள்ள, மற்ற இளைஞர்கள் மனித சங்கிலி போன்று கைகளை கோர்த்து கொண்டார்கள்.

அப்போது ஆற்றின் உள்ளே இருந்த இளைஞர் நாயை பிடித்து கரைக்கு கொண்டு வந்தார். இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாயை ஆற்றில் இருந்து மீட்டது பலரையும் நெகிழ செய்துள்ளது. இந்த மீட்பு வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #TWITTER #DOG #HUMAN CHAIN