ஐபிஎல்ல எல்லாம் நல்லாதான் ஆடுறாரு.. ஆனா இந்திய அணின்னு வந்துட்டாதான் படுமோசமா இருக்கு.. இளம் வீரரை சரமாரியாக விளாசிய முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் இந்திய இளம் வீரரின் ஆட்டம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியும் கைப்பற்றின. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.
இந்த தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் சூர்யகுமார் யாதவ், ப்ரித்வி ஷா, வருண் சக்கரவர்த்தி, சேத்தன் சக்காரியா, இஷான் கிஷன் உள்ளிட்ட பலரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இளம் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு இது மோசமான தொடராக அமைத்தது. அவர் விளையாடிய போட்டிகளில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் சஞ்சு சாம்சனின் மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மலும், சஞ்சு சாம்சனின் ஆட்டத்தை விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘சஞ்சு சாம்சன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இருக்கும் அவர் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடி இருக்கிறார். ஆனால் இந்திய அணி என்று வந்துவிட்டால் அவரது ஆட்டம் மோசமாக உள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடுவது போல் பெரிய ஷாட்டுகளை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அடிப்பதில்லை. கிடைக்கும் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்துவது இல்லை’ என கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 3 சதங்கள் அடித்துள்ள சஞ்சு சம்சன், உள்ளூர் கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதமடித்து அசத்தியிருந்தார். ஆனால் நடந்து முடித்த இலங்கை தொடரில் கடைசி ஒருநாள் போட்டியில் மட்டும் அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்தார். ஆனால் அடுத்து நடந்த டி20 தொடரில் மோசமான ஆட்டத்தை சஞ்சு சாம்சன் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
