VIDEO: ஏண்டா அப்படி கத்துனோம்ன்னு ராகுல் சஹாரே ‘ஃபீல்’ பண்ணிருப்பாரு.. அவுட்டான பின் ‘இலங்கை’ வீரர் செஞ்ச செயல்.. மனசுல நின்னுட்டீங்க பிரதர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அவுட்டான பின் இலங்கை வீரர் செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல் உள்ளிட்ட அறிமுக வீரர்களுடன் இந்திய அணி களம் கண்டது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய வீரர்கள், இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 132 ரன்களை இந்திய அணி எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்கள் அடித்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் இலங்கை அணியைப் பொறுத்தவரை தனஞ்சய டி சில்வா 40 ரன்களும், மினோட் பானுகா 36 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன்மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.
இந்த நிலையில், இலங்கை வீரர் ஹசரங்கா அவுட்டான பின் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டியில் 31 பந்துக்கு 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது போட்டியின் 15-வது ஓவரை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹார் வீசினார்.
Wanindu Hasaranga upholds the Spirit of the Game! 👏🏽
Tune into Sony Six (ENG), Sony Ten 1 (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/QYC4z57UgI) now! 📺#SLvINDOnlyOnSonyTen #HungerToWin #WaninduHasaranga pic.twitter.com/0CwCaTkkAS
— Sony Sports (@SonySportsIndia) July 28, 2021
அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட இலங்கை ஆல்ரவுண்டர் ஹசரங்கா, புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதனால் அவரது விக்கெட்டை, ராகுல் சஹார் ஆக்ரோஷமாக கொண்டாடினார். ஆனால் ஹசரங்கா, ராகுல் சஹார் சிறப்பாக பந்துவீசியதாக தனது பேட்டைத் தட்டி பாராட்டினார். ஹசரங்காவின் இந்த பண்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.