மொத்த டீமும் சந்தோஷத்துல துள்ளிக் குதிக்கும்போது ‘ஒருத்தர்’ மட்டும் அமைதியா உட்கார்ந்திட்டு இருந்தாரு.. எதுக்குன்னு அவரே சொன்ன ‘வேறலெவல்’ பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பின்பு கொண்டாடாமல் அமைதியாக இருந்தது குறித்து நியூஸிலாந்து வீரர் ஜிம்மி நீசம் விளக்கம் கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டி நேற்று முன்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மொயின் அலி 51 ரன்களும், டேவிட் மாலன் 41 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 19 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூஸிலாந்து அணி நுழைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 72 ரன்களும், டெவோன் கான்வே 46 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், இப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதும் டக் அவுட்டில் அமர்ந்திருந்த நியூஸிலாந்து வீரர்கள் அனைவரும் துள்ளிக்குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சிறிய புன்னகை மட்டுமே செய்தார். ஆனால் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜிம்மி நீசம் மட்டும் எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதற்கு விளக்கம் அளித்த ஜிம்மி நீசம், ‘வேலை முடிந்துவிட்டதா? நான் அப்படி நினைக்கவில்லை’ என அவர் ட்வீட் செய்துள்ளார்.
Job finished? I don’t think so. https://t.co/uBCLLUuf6B
— Jimmy Neesham (@JimmyNeesh) November 10, 2021
அதற்கு காரணம், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இதேபோல் இங்கிலாந்தை எதிர்த்து நியூஸிலாந்து விளையாடியது. அப்போட்டியில் நியூஸிலாந்துதான் வெற்றி பெரும் என அனைவரும் கருதினர். அதனால் நியூஸிலாந்து வீரர்களும் கொண்டாடத்துக்கு தயாராக இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.