“எவ்ளோ சொல்லியும் கேக்காம... தொக்கா தூக்கி கொடுத்துட்டு... இப்போ அல்லல் பட்டு நிக்குறிங்களே!”.. ஐபிஎல் அணிக்காக ஃபீல் பண்ணும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Behindwoods News Bureau | Nov 09, 2020 11:17 PM

2020 ஐபிஎல் தொடருக்கு முன் நல்ல வீரர்களை தங்கள் அணிக்கு எடுத்துக் கொண்டதே இருந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

IPL2020: this team loss wonderful bowler and faces IPL final

அதே சமயம் தங்கள் அணியின் சிறந்த பந்துவீச்சாளரை மும்பை அணிக்கு மாற்றியதுதான் டெல்லி அணிக்கு பெரிய வினையாகவந்து நின்றுள்ளது. பிளே-ஆஃப் சுற்றில் எந்த வீரை டெல்லி அணி, மும்பை அணிக்கு அனுப்பி வைத்ததோ, அதே வீரரான  ட்ரென்ட் போல்ட் தான் அந்த அணிக்கு தோல்வியை பரிசாக திருப்பிக் கொடுத்தார்.2018ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஆடிய ட்ரென்ட் போல்ட் 14 போட்டிகளில் 18 விக்கெட்களை வீழ்த்தினார். இருந்தாலும் அடுத்த ஆண்டே, ஆண்டு காகிசோ ரபாடா டெல்லிக்காக சிறப்பாக பந்து வீசி போல்டின் இடத்தை பறித்துக் கொண்டார்.

பின்னர் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற ட்ரென்ட் போல்ட்,  தனக்கு அதிக போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கததால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவரை டெல்லி அணி மாற்றியது. அப்போதே, இப்படி நல்ல வேகப் பந்துவீச்சாளரை யாராவது இப்படி தாராளமாக வேறு அணிக்கு தூக்கிக் தொக்காக கொடுப்பார்களா? என ரசிகர்கள் கேள்வி கேட்டனர்.

இந்நிலையில் தற்போது அதுதான் டெல்லி அணிக்கு ஆபத்தாக வந்து முடிந்துள்ளது. ஆம், பிளே-ஆஃப் சுற்றில் முதல் தகுதிப் போட்டியில் போல்ட்,  முதல் ஓவரில் ப்ரித்வி ஷா, ரஹானே என இரண்டு பேட்ஸ்மேன்களை தான் வீசிய பந்தில், டக் அவுட் ஆக்கி வெளியே அனுப்பினார். இதனை அடுத்து இறுதிப் போட்டியில் போல்ட் என்ன செய்யப் போகிறார்? தனது தாய் அணியை தற்போதைய அணிக்காக, விக்கெட் வேட்டையாடி தோற்கடிப்பாரா? என்று  ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2020: this team loss wonderful bowler and faces IPL final | Sports News.