"அவரா...? அவரு, டீமோட தேவையில்லாத DECORATION!... எப்படியும் சம்பளம் வந்துடும்... அப்புறம் என்ன?" - மோசமாக கிண்டல் பேசி 'CSK-வை சீண்டிய சேவாக்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதொடர் தோல்விகளால் சிஎஸ்கேவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் மிக மோசமாக விமர்சித்துள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நிலையில், முன்னதாக நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. போட்டியின் கடைசி வரை சென்னை அணியே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக ரன் எடுப்பதை கட்டுப்படுத்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
இப்படி எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியில் தோல்வியடைந்ததாலும், இந்த சீசனில் அடுத்தடுத்து தோல்வியடைந்து வருவதாலும் சிஎஸ்கே அணி மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் தோனி மற்றும் மிடில் ஆர்டரில் சொதப்பி வரும் கேதர் ஜாதவ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை அணியின் தொடர் தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், "168 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக விளையாடினார்கள் என எனக்கு தோன்றுகிறது. என்னை பொறுத்தவரையில் சென்னை அணியில் சில வீரர்கள் அரசாங்க வேலை பார்ப்பவர்கள் போல் கடமைக்கு விளையாடி வருகிறார்கள்.
நன்றாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் தங்களுக்கு சம்பளம் வந்து விடுமென அவர்களுக்கு தெரியும்" என மோசமாக கிண்டல் செய்துள்ளார். அந்தப் போட்டியில் குறிப்பாக 12 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த ஜாதவை சமூக ஊடகங்களில் பலரும் கிண்டல் செய்துவரும் நிலையில், அவரை சேவாக்கும் "விரு கி பைதக்" எனும் தன் பேஸ்புக் தொடரில் ஹிந்தியில் "பயனற்ற அலங்காரம்" எனவும், "ஆட்ட நாயகன்" எனவும் அழைத்து கிண்டல் செய்துள்ளார்.