“சூரத் தனமான பார்ட்னர்ஷிப்!”.. தவிடுபொடியான சிஎஸ்கேவின் கணக்கு!.. ‘பட்லரை நெகிழ வைக்க ‘தோனி’ கொடுத்த சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் 37 ஆவது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது.
இதில் இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றால் தான், பிளே ஆஃப் சுற்றுக்கான தகுதியை தக்கவைக்க முடியும் என்பதால் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு காத்திருந்தது. கடந்த போட்டியில் முதல் பேட்டிங்கில் 179 ரன்களை குவித்து வெற்றியை நெருங்கி தோற்றதால் இந்த போட்டியில் அதே போன்று ரன்களை குவித்து சரியான பவுலிங் மூலம் வெற்றி பெறுவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கணக்குப் போட்டது.
அதற்கேற்ப டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். எனினும் தோனி கணிப்புக்கு முற்றிலும் எதிர்மாறாக இருந்தது பேட்டிங். 9 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தபோது ஆர்ச்சரின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார் டூ பிளீசிஸ். அவரைத் தொடர்ந்து வந்த வாட்சன் 2 பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டினாலும் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து ராயுடு 13 ரன்னிலும், சாம் கர்ரன் 22 ரன்னிலும் அவுட் ஆகினர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா பொறுப்பாக ஆடி 100-ஐ கடந்து சென்றனர். இதில் தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த போகிறார் என எதிர்பார்த்த போது 28 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த போது அவுட்டாகி ரசிகர்களின் மனம் நொறுங்க வெளியேறினார். 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் தந்து ஜடேஜா வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 175 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ராஜஸ்தானை பொருத்தவரை பந்துவீச்சில் ஆர்ச்சர் மிக சிறப்பாக செயல்பட்டார். நான்கு ஓவர்களுக்கு 20 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். அடுத்தடுத்து வந்த ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவேதியா உள்ளிட்டோர் சென்னை அணியின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தினர். 126 ரன்கள் என்கிற எளிமையான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அடுத்து களமிறங்கியது. ஆனாலும் ராஜஸ்தானுக்கு பெரும் நெருக்கடி கொடுக்க நினைத்து சென்னை பவுலர்கள் செயல்பட்டனர். அதற்கு ஏற்ப 19 ரன்களில் பென் ஸ்டோக்ஸ், 4 ரன்களில் ராபின் உத்தப்பா, டக் அவுட்டில் சஞ்சு சாம்சன் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சாய்க்கப்பட்டன. ஆஹா சென்னைக்கு வெற்றி வாய்ப்புகள் வந்து விடுமோ என்று நினைத்த போதுதான், “நாங்க இருக்கோம்ல!” என்கிறபடி பட்லரும் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்தனர். இந்த அதிரடி கூட்டணி கடைசியாக 24 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்கிற எளிமையான நிலையை எட்டினர்.
அடுத்த ஓவரில் இருவரும் சேர்ந்து 12 ரன்களை விளாச 18 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஜடேஜா வீசிய 18-வது ஓவரில் இரண்டு சிங்கிள்களை சாதாரணமாக அடித்து எளிமையாக ஒரு வெற்றியை ராஜஸ்தான் பெற்றது. கடைசி வரை பட்லர் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 70 ரன்களை எடுத்தும், ஸ்மித் 34 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தும் அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர்.
ராஜஸ்தான் அணி வென்றதும், ஜோஸ் பட்லருக்கு தோனி தன்னுடைய நம்பர் மற்றும் ஒஎயர் பொறித்த டி-ஷர்ட்டை கொடுத்து அன்பால் நெகிழவைத்தார்.