இப்ப புரியுதா?.. ஏன் 'மும்பை இந்தியன்ஸ்' அணி இவ்ளோ STRONG-அ இருக்காங்கனு?.. மற்ற அணிகளை அலறவிடுவதற்கு காரணம் 'இது' தான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஏன் யாராலும் அசைக்க முடியவில்லை என முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
14வது ஐபிஎல் தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்தாண்டும் கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி எதனால் இவ்வளவு வலிமையாக உள்ளது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், பல சிறப்பான இந்திய வீரர்களை வைத்துள்ளதே மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் பலமாகும். இந்த அணியில் ரோகித், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ராகுல் சஹார் ஆகியோர் 100% ப்ளேயிங் 11ல் ஆடுவார்கள். மேலும், போட்டியையும் தனியாளாக போராடி வென்றுக்கொடுக்க கூடியவர்கள்.
இதுபோன்ற சிறப்பான இந்திய வீரர்கள் அதிகம் இருக்கும் ஒரு அணியை கூட காண முடியாது. ஏனெனில் ஒருநாள், டி20ல் ரோகித்தை விட சிறந்த பேட்ஸ்மேன் எங்கும் கிடைக்கமாட்டார். பவுலிங்கில் பும்ராவை போல, ஆல்ரவுண்டரில் ஹர்த்திக் பாண்டியா, மற்றும் ஆட்டத்தை மாற்றும் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் போல எங்கும் கிடையாது.
மும்பை அணிக்கு 2வது பலம் என்னவென்றால் அது கேப்டன்சிதான். ரோகித் சர்மா ஒரு 24 கேரட் தங்கம். ஆட்டத்தை நன்கு புரிந்துவைத்துள்ளவர். அவரின் முகத்தை பார்த்து ஆட்டம் எதை நோக்கி செல்கிறது என உங்களால் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அவருக்கு அனைத்தையும் நிதானமாக கண்ட்ரோலில் வைத்துக்கொள்ள தெரியும்.
3வது பலம் என்னவென்றால் பந்துவீச்சு. மும்பை அணியில் மிகச்சிறப்பான வேகப்பந்துவீச்சாளர்கள் படை ( பும்ரா, நாதன் குல்டர் நைல், ட்ரெண்ட் போல்ட், தவால் குல்கர்ணி) உள்ளது. மும்பை அணியின் பந்துவீச்சுக்கு இணையாக ஒரே ஒரு அணிதான் உள்ளது. அது டெல்லி கேப்பிடல்ஸ் ஆகும். அங்கு ரபாடா, நார்ட்ஜே உள்ளனர். எனினும், இந்திய பந்துவீச்சாளர்களாக அவர்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.