தோனி அவுட்டானா என்ன ‘நான்’ இருக்கேன்ல.. சிஎஸ்கே வெற்றிக்கு ‘முக்கிய’ காரணமா இருந்தவரை மறந்திடாதீங்க..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களும், அம்பட்டி ராயுடு 41 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியை பொருத்தவரை கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார்.
இப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு ஆல்ரவுண்டர் ஜடேஜா முக்கிய முக்கிய பங்கு வகித்தார். தோனி அவுட்டானதும் ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பை ஜடேஜா மேற்கொண்டார். அவர் 10 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 25 ரன்களை எடுத்தார். கடைசியாக ஜடேஜா அடித்த இந்த ரன்கள் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் பந்து வீச்சில் ஹைதராபாத் அணியின் முக்கிய விக்கெட்டான ஜானி பேர்ஸ்டோவை ஜடேஜா அவுட்டாகினார். இப்போட்டியில் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் மற்றும் சிறந்த ஸ்டைக்கர் ஆகிய இரண்டு விருதுகளையும் ஜடேஜா வாங்கனார் என்பது குறிப்பிடத்தக்கது.