VIDEO: ‘தல’ய இப்டி பாத்து எத்தன நாளாச்சு.. எதிரணியை ‘மிரள’ வைத்த அடி.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி அடித்த சிக்ஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் குர்ரன் மற்றும் டு பிளிசிஸ் களமிறங்கினர். இதில் டு பிளிசிஸ் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார்.
இதனை அடுத்து களமிறங்கிய வாட்சனுடன் (42) ஜோடி சேர்ந்த சாம் குர்ரன் (31) அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அடுத்து களமிறங்கிய அம்பட்டி ராயுடு 41 ரன்கள் எடுத்து அவுட்டானதும் கேப்டன் தோனி களமிறங்கினார். அப்போது போட்டியின் 19-வது ஓவரை தமிழக வீரர் நடராஜன் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை யாக்கராக வீசினார். அதனை தோனி சிக்ஸருக்கு விளாசினார்.
Dhoni 6️⃣ 🔥 #msdhoni #dhoni #csk #CSKvsSRH pic.twitter.com/zFRUlgb3EJ
— Nitin (@sunbagandu) October 13, 2020
102 Meter SIX
• 4th Biggest Six in IPL 2020
Mahendra singh Dhoni 😎🔥@MSDhoni • #IPL2020 • #WhistlePodu pic.twitter.com/dKRVv8dfHU
— 😎 Binu D Bloods 😎 👉CSK👈 (@BinuBloods) October 13, 2020
102 மீட்டர் தொலைவில் தோனி அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸரை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். இது இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிக தொலைவில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் வரிசையில் 4-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
