"இவங்கள சாதாரணமா நினைச்சிட முடியாது"... 'ராஜஸ்தான் அணியுடன் விளையாட'... 'யாராரையெல்லாம் களம் இறக்குகிறார், தோனி???'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

ஷார்ஜா மைதானத்தில் இன்று இரவு நடக்கவுள்ள போட்டியில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. ஆனால் மறுபுறம் கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றியை பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கவுள்ளது.
முன்னதாக 2008ஆம் ஆண்டு ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அதன்பிறகு அந்த அணி பெரிதாக சோபிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் சிஸ்கே அணியில் பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படாது எனக் கூறப்படுகிறது. அதே வெற்றிக் கூட்டணியோடுதான் தோனி களமிறங்குவர் எனவும் கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி
முரளி விஜய்
ஷேன் வாட்சன்
டூப்ளிஸிஸ்
அம்பத்தி ராயுடு
கேதர் ஜாதவ்
தோனி
ரவீந்திர ஜடேஜா
சாம் கரன்
தீபக் சாஹர்
பியூஸ் சாவ்லா
லுங்கி எங்கிடி

மற்ற செய்திகள்
