'ச்ச... நெனைச்சாலே கேவலமா இருக்கு!.. சரி பரவாயில்ல... இது ஒரு வெற்றிகரமான தோல்வி தான்'!.. விரக்தியில் உளறிய இங்கிலாந்து கேப்டன் மார்கன்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா உடனான முதல் ஒரு நாள் போட்டியில் தோல்வியைத் தழுவியது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 318 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அந்த அணி முதல் விக்கெட்டுக்கு மிக விரைவாக 135 ரன்களை சேர்த்து. ஆனால் அதன் பின்பு வந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடாததால் தோல்வியைத் தழுவியது.
இதுகுறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் மார்கன், "நாங்கள் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். இந்தப் போட்டியின் பல கட்டங்களில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். பேட்டிங்கின்போது எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால், அதனை பயன்படுத்த தவறியது வெட்கக்கேடானது.
அதேபோல புனே பிட்ச் மிகவும் பிரமாதமாக இருந்தது. ராயும், பேர்ஸ்டோவும் மிகவும் அற்புதமாக விளையாடினார்கள். அதேபோல இந்திய பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசினார்கள். சில நேரங்களில் 10-20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைவதை விட இந்த மாதிரியான தோல்வி சிறந்தது தான்" என்றார்.
மேலும் பேசிய அவர், "ஜோ ரூட்டை நாங்கள் மிஸ் செய்கிறோம். அணியின் 3ஆவது பேட்ஸ்மேனாக அவர் களமிறங்கி சிறப்பாக விளையாடக் கூடியவர் என அனைவருக்குமே தெரியும். அவர் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவுதான். எனினும், அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். அவர் தன்னுடைய குடும்பத்துக்காகவும் நேரம் செலவிட வேண்டும் அதனால் ஓய்வில் இருக்கிறார்" என்றார்.