VIDEO: என்ன ‘கைப்புள்ள’ வடிவேலு மாதிரி படுத்துட்டாப்ல.. யாருப்பா அந்த ப்ளேயர்..? தெறிக்கும் மீம்ஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியை தழுவியது.
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் (Shikhar Dhawan) மற்றும் ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்த கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது வெங்கடேஷ் ஐயர் வீசிய 5-வது ஓவரில் ஷிகர் தவான் (24 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.
இதனை அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இந்த சமயத்தில் களமிறங்கிய ரிஷப் பந்துடன் கூட்டணி அமைத்த ஸ்டீவன் ஸ்மித் அதிரடி காட்ட ஆரம்பித்தார். அப்போது லோக்கி பெர்குசன் ஆட்டத்தின் 13-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித், பின்னால் பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக பந்து அவரது தொடைப்பகுதியைத் தாக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் மைதானத்தில் சில நொடிகள் படுத்துவிட்டார்.
— Simran (@CowCorner9) September 28, 2021
இதனை அடுத்து அந்த ஓவரின் அடுத்த பந்தே போல்டாகி ஸ்டீவன் ஸ்மித் (39 ரன்கள்) வெளியேறினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். கேப்டன் ரிஷப் பந்த் மட்டுமே 39 ரன்கள் அடித்து கடைசி ஓவர் வரை தாக்குப்பிடித்தார். அதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை டெல்லி அணி எடுத்தது.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் தலா 2 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 18.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா 36 ரன்களும், சுப்மன் கில் 30 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் ஸ்டீவன் ஸ்மித் மைதானத்தில் படுத்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரும் மீம்ஸ்கள் உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர்.
Pain iz real gaizzz🤣🤣#KKRvsDC pic.twitter.com/aK3AqSlRiJ
— Shush 🔥 (@shush__13) September 28, 2021
Dad everyday Me everyday
at 06:00 AM till 01:00 PM pic.twitter.com/A55SCTZgSh
— Bawaal (@iamBawaal) September 28, 2021
Steve Smith after IPL till Ashes pic.twitter.com/g2EmgdwLDk
— Simran Paliwal (@Bewafaladki1) September 28, 2021
Me after eating Puranpoli: pic.twitter.com/kZba19PT5U
— shruti (@JustShruting) September 28, 2021