‘உலகத்துல எங்க மேட்ச் நடந்தாலும் நேர்ல போய் பார்ப்பேன்’.. ‘அந்த அளவுக்கு அவரோட தீவிர ரசிகன்’.. இந்திய ‘ஸ்டார்’ ப்ளேயரை தாறுமாறாக புகழ்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ் இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
![Legend of West Indies cricket Curtly Ambrose is big fan of Kohli Legend of West Indies cricket Curtly Ambrose is big fan of Kohli](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/legend-of-west-indies-cricket-curtly-ambrose-is-big-fan-of-kohli.jpg)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கர்ட்லி ஆம்ப்ரோஸ் (Curtly Ambrose), தனது மிரட்டல் பவுன்சர்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தவர். 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 405 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 225 விக்கெட்டுகளை வீழ்த்தி கர்ட்லி ஆம்ப்ரோஸ் அசத்தியுள்ளார். இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஆம்ப்ரோஸ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
அதில், ‘இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நான் மிக தீவிரமான ரசிகன். அவரது ஆட்டத்தை உலகில் எந்த ஒரு மைதானத்திலும் நேரில் சென்று பணம் கொடுத்து பார்க்கும் அளவிற்கு நான் ரசிகன். அந்த அளவிற்கு கோலியின் ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நேர்த்தியாக ஆடுகிறார். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்’ என கர்ட்லி ஆம்ப்ரோஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பல சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டிக்கு நிகராக கருதப்படும், உலக டஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள இப்போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)