"அவரோட டைம் எல்லாம் முடிஞ்சு போச்சு..." 'சிஎஸ்கே' டீமோட முதல் 'TARGET' இவரு தானா??... பரபரப்பை கிளப்பியுள்ள லேட்டஸ்ட் 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த முறை ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி திரில்லிங் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணியின் இளம் வீரர் ருத்துராஜ் கெயிக்வாட் சிறப்பாக ஆடி 72 ரன்கள் அடித்தார். இறுதியில் களமிறங்கிய ஜடேஜா, கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
முன்னதாக, இந்த சீஸனின் தொடக்கத்தில் சென்னை அணி மோசமாக ஆடி வந்த நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பின்னர் சிறப்பாக ஆடி வருகிறது. அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் மூத்த வீரர்களில் டு பிளெஸ்ஸி தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை. அதிலும் குறிப்பாக, வாட்சன் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இரண்டு, மூன்று போட்டிகளில் வாட்சனுக்கு வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், நேற்றைய போட்டியில் மீண்டும் களமிறங்கினார். ஆனால், நேற்றும் வழக்கம் போல பெரிய ரன் குவிப்பில் ஈடுபடாமல் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே வாட்சன் சிறப்பாக ஆடியுள்ளார்.
அடுத்த ஆண்டு சென்னை அணி, வாட்சன், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட சில சீனியர் வீரர்களை வெளியேற்றி ஏலத்தில் புதிய வீரர்களை எடுக்கவுள்ளதாக பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அதிலும், தற்போதுள்ள நிலைப்படி வாட்சன் பார்மில் இல்லாததால் முதல் வீரராக அவரைத் தான் சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் வெளியேற்றும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்
