'நல்ல ப்ளேயர்ஸ் இருந்து என்ன யூஸ்?.. இதுவரைக்கும் ஒரு தடவ கூட கப் ஜெயிக்கல!'.. '13 வருஷமா... 'ஆர்சிபி'க்கு என்ன தான் சிக்கல்?'.. 'இந்த' இடத்துல தான் சொதப்புறாங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத அணியாக வலம் வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அந்த அணியில் எப்போதும் நட்சத்திர வீரர்கள், தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இடம் பெற்று வந்துள்ளனர். அப்படி இருந்தும் அந்த அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை. இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆனால், பலரும் கேப்டன் விராட் கோலியின் மோசமான கேப்டன்சி தான் இந்த தோல்விகளுக்கு காரணம் என கூறி வருகின்றனர்.
2008 முதல் பெங்களூர் அணிக்கு என்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதே போல நல்ல வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். விராட் கோலி, 2008 முதல் அந்த அணியில் இடம் பெற்றுள்ளார்.
எட்டு ஆண்டுகள் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். ஏபி டிவில்லியர்ஸ் கடந்த சில ஆண்டுகளாக அந்த அணியில் ஆடி வருகிறார். இது தவிர பல சிறந்த வீரர்களை பெங்களூர் அணி வெளியேற்றி உள்ளது.
கடந்த காலங்களில் ஷேன் வாட்சன், கிறிஸ் கெயில், கேஎல் ராகுல் என பல நல்ல வீரர்கள் அணியில் இருந்தும் அவர்களின் ஒரு மோசமான சீசனை மனதில் வைத்து அவர்களை நீக்கி இருந்தது பெங்களூர் அணி. அதுவும் அந்த அணி கோப்பை வெல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.
அது மட்டுமின்றி, பந்துவீச்சில் அந்த அணி சரியான வீரர்களை தேர்வு செய்வதில்லை என்ற புகார் உள்ளது. சாஹல் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை, அவர்களுக்கு போதிய வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், ரசிகர்கள், பெங்களூர் அணியை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். ஈ சாலா கப் நம்தே என தொடர்ந்து நம்பிக் கொண்டிருக்கும் அந்த அணியின் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.