‘ஸ்டெம்பில் பட்டும் அவுட் இல்லை’.. ‘டுபிளிஸுக்கு அடித்த அதிர்ஷ்டம்’.. எதனால்?.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 21, 2019 11:24 PM

ஸ்டெம்பில் பட்டும் சென்னை வீரர் டுபிளிஸிஸ் அவுட்டாகாத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Ball hit the stump, but not out

ஐபிஎல் டி20 லீக்கின் மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 38 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 39 -வது போட்டியான இன்றைய(21.04.2019) போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதில் கோலி 9 ரன்கள் எடுத்திருந்த போது தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த பார்தீவ் பட்டேல் மற்றும் டிவில்லியர்ஸ் கூட்டணி நிதனமாக ஆடி ரன் சேர்க்க தொடங்கியது. இதில் அதிகபட்சமாக பார்தீவ் பட்டேல் 53 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

இப்போட்டியில் பெங்களூரு வீரர் உமேஷ் யாதவ் வீசிய ஸ்டெம்பில் உரசி செல்லும் ஆனால் விதிப்படி பெய்ல் விழுந்தால் மட்டுமே அவுட் கொடுக்கப்படும். இதனால் அப்போது சென்னை வீரர் டுபிளிஸ் அவுட்டில் இருந்து தப்பித்தார்.

Tags : #IPL #IPL2019 #WHISTLEPODU #YELLOVE #RCBVCSK #FAFDUPLESSIS