'சிட்னி டெஸ்ட் மேட்ச்ல...' க்ரீன் தொப்பிக்கு நோ...' 'எல்லார் தலையிலும் பிங்க் தொப்பி...' - பிங்க் பால் டெஸ்ட் போட்டி ஆனதற்கான காரணம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநாளை (07-01-2021) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி விளையாடும் சிட்னி டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற தொப்பி அணிந்து விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![India and Australia play Sydney Test wearing the pink cap India and Australia play Sydney Test wearing the pink cap](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/india-and-australia-play-sydney-test-wearing-the-pink-cap.jpg)
பொதுவாக பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் டெஸ்ட் போட்டியைதான் பிங்க் பால் டெஸ்ட் எனக் கூறுவார்கள். இம்மாதிரியான இரு அணிகளும் ஒரு பகல் இரவு போட்டியில் விளையாடி உள்ளன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ரத்தின் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் முயற்சியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த பிங்க் டெஸ்டை முன்னெடுத்தது. மெக்ரத், மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2009 முதல் சிட்னி மைதானத்தில் இந்த பிங்க் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
நாளை நடைபெற உள்ள போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பச்சை நிற தொப்பிக்கு பதிலாக பிங்க் நிற தொப்பி போட்டு ஆட்டத்தை ஆடுவார்கள். இதற்குமுன் கடைசியாக ஆஸ்திரேலியா நியூஸிலாந்துடன் பிங்க் டெஸ்டில் விளையாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)