‘இந்த வருடத்திற்கான முக்கிய விருது அறிவிப்பு..’ இந்தியாவின் லெஜண்ட் வீரரைக் கௌரவித்த ஐசிசி..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 19, 2019 11:25 AM

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளை அறிவித்துள்ளது.

Sachin Tendulkar 6th Indian to be inducted into ICC Hall of fame

கிரிக்கெட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக ஐசிசி ஆண்டுதோறும் ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் உலகில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர், டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த வீரர், 100 சதங்கள் அடித்த முதல் வீரர் எனப் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சினுக்கு இந்தச் சிறப்பை அளித்துள்ளது ஐசிசி.

ஏற்கெனவே இந்தியாவிலிருந்து பிஷன் சிங் பேடி (2009), சுனில் கவாஸ்கர் (2009), கபில் தேவ் (2009), அனில் கும்ப்ளே (2015), ராகுல் ட்ராவிட் (2018) ஆகியோர் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளனர். தற்போது ஆறாவதாக சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சச்சினுடன் சேர்த்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை கேதரின் ஃபிட்பாட்ரிக் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Tags : #HALLOFFAME #SACHINTENDULKAR #ICC