‘இனிமேலும் கேப்டனாக தொடரப் போறதில்ல!’.. கிரிக்கெட் ரசிகர்களை ‘அதிர்ச்சியில் ஆழ்த்திய நட்சத்திர வீரரின் ராஜினாமா முடிவு!’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்க வீரர் டூப்ளிசிஸ், தனது தொடர் தோல்விகளை அடுத்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சென்ற வருடம் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடந்தபோது, அதில் அடைந்த தோல்வியை அடுத்து, டூப்ளிசிஸ் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது அணி, தனது சொந்த மண்ணில் தோல்வி அடைந்ததை அடுத்து, டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக டூப்ளிசிஸ் அறிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது இந்த ராஜினாமா குறித்து, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த டூப்ளிசிஸ், தனது நாட்டின் அணியை தான் வழிநடத்திச் சென்றதுதான், தனது இத்தனை ஆண்டுகால வாழ்நாளில் மிக பெருமையான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : #DUPLESSIS #CRICKET #SOUTHAFRICA
