'இத விட மாஸ் கேட்ச் காட்டுறவங்களுக்கு 'LIFETIME SETTLEMENT'... 'மிரண்டு போன கிரிக்கெட் ஜாம்பவான்கள்'... 'சிட்டாக பறந்த இந்திய வீராங்கனை'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது ஹர்லீன் டியோல் பிடித்த கேட்ச் இணையத்தைக் கலக்கி வருகிறது.
நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நடாலி சீவர் 55 ரன்களும், ஆலன் ஜோன்ஸ் 43 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ஷபாலி வர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்மிருதி மந்தனா 17 பந்தில் 6 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஒரு ரன்னில் வெளியேறினார். இந்தியா 8.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
அதன்பின் மழை நிற்கவில்லை. ஹர்லின் டியோல் 17 ரன்னும், தீப்தி ஷர்மா 4 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகி விருது நடாலி சீவருக்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையே இந்த போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையிலும், ஹர்லின் டியோல் பிடித்த கேட்ச் கிரிக்கெட் வரலாற்றில் மிகசிறந்த ஒரு கேட்ச்சாக இடம்பிடித்துள்ளது. இங்கிலாந்து இன்னிங்ஸின் 19 வது ஓவரில் ஹர்லின் சிட்டாகப் பறந்து பிடித்த கேட்ச்சை பார்த்துப் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பிரமித்துப் போயுள்ளார்கள். அவர்கள் பலரும் ஹர்லினுக்கு தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
That was a brilliant catch @imharleenDeol. Definitely the catch of the year for me!pic.twitter.com/pDUcVeOVN8
— Sachin Tendulkar (@sachin_rt) July 10, 2021
As good a catch one will ever see on a cricket field, from Harleen Deol. Absolutely top class. https://t.co/CKmB3uZ7OH
— VVS Laxman (@VVSLaxman281) July 10, 2021
OMG 😱 🤯🤯@imharleenDeol take a bow!! Calling it now the best we will see this series!! pic.twitter.com/O4Dwm4OYlU
— Lisa Sthalekar (@sthalekar93) July 9, 2021
Amazing! Women are just the best! ❤️👏👏👏 pic.twitter.com/smlaWwUW9S
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 10, 2021