நேத்து ‘மிடில் ஆர்டர்ல’ பொறுப்பான ஆட்டம்.. இனி அடுத்த ‘டார்கெட்’ அதுதான்.. பெரிய ப்ளான் போடும் பாண்ட்யா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. நேற்று சிட்னி மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா பொறுப்பாக விளையாடி 90 ரன்களை அடித்து அவுட்டானார்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய ஹர்திக் பாண்ட்யா, ‘நான் எனது பந்து வீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். சரியான நேரம் வரும்போது பந்து வீசுவேன். எனது பவுலிங்கில் 100 சதவீத திறனை கொண்டுவர விரும்புகிறேன். சர்வதேச அளவிற்கு தேவையான வேகத்தில் பந்து வீச வேண்டும். நீண்ட கால திட்டம் ஒன்றை இந்திய அணி யோசித்து வருகிறது. டி20 உலகக்கோப்பை, மற்ற முக்கிய தொடர்களை பற்றி யோசிக்கும்போது என்னுடைய பந்துவீச்சு முக்கியத்துவம் பெறுவதாக இருக்கலாம்’ என பாண்ட்யா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாண்ட்யா, ‘இந்தியாவுக்காக விளையாடும் ஆல்ரவுண்டர் யாராவது கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை விளையாட வைக்க வேண்டிய வழிகளை நாம் தேட வேண்டும். ஐந்து பவுலர்களை வைத்துக்கொண்டு விளையாடுவது கஷ்டமான ஒன்று. அவர்களில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலும், அவரது இடத்தை நிரப்புவதற்கு தயராக இருக்க வேண்டும்’ என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.