இப்டி கூட மேட்ச் மாறுமா??.. "CSK VS MI" போட்டியை மிஞ்சிய CLIMAX.. கடைசி இரண்டு பந்துகளில் காத்திருந்த ட்விஸ்ட்..'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில், கடைசி பந்து வரை ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்து, பின்னர் தான் முடிவு தெரிந்தது.
இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி ஆடிய சன்ரைசர்ஸ் அணியில், வில்லியம்சன் மற்றும் திரிபாதி விக்கெட்டை அடுத்தடுத்து இழந்திருந்தது. இதன் பின்னர், அபிஷேக் ஷர்மா மற்றும் மார்க்ரம் ஆகியோர், சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.
முழுக்க முழுக்க அதிரடி
அபிஷேக் ஷர்மா 65 ரன்களும், மார்க்கரம் 56 ரன்களும் எடுத்து அவுட்டாக, கடைசியில் களமிறங்கிய சஷாங்க் சிங், 6 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளுக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியும், ஆரம்பத்தில் இருந்தே அதிரடியுடன் ஆடி ரன் எடுக்கத் தொடங்கியது. ஹைதராபாத் அணியின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார் சஹா. 38 பந்துகளில், 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 68 ரன்கள் எடுத்த சஹா, உம்ரான் மாலிக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், டெவாட்டியா அதிரடி காட்டி ஆடிக் கொண்டிருந்தார்.
இறுதியில், கடைசி ஓவரில், குஜராத் அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது டெவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
கடைசி கட்டத்தில் பரபரப்பு
இந்த ஓவரை மார்கோ ஜென்சன் வீச, முதல் பந்தினை சிக்சருக்கு அனுப்பினார் டெவாட்டியா. தொடர்ந்து, கடைசி 4 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ரஷீத் கான் தனது பங்கிற்கு சிக்ஸர் ஒன்றை அனுப்பினார். தொடர்ந்து, அடுத்த பால் டாட் ஆனது. இதனால், இரண்டு பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தையும் ரஷீத் சிக்சருக்கு அனுப்ப, கடைசி பந்தில் 3 ரன்கள் வேண்டும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
மேட்சை முடித்த ரஷீத் கான்
இந்த பந்தை எதிர்கொண்ட ரஷீத், அதனை சிக்சருக்கு அனுப்பி போட்டியை குஜராத் பக்கம் திருப்பினார். 4 பந்துகளில் 3 சிக்ஸர்களை அடித்து, குஜராத் அணி முதலிடத்திற்கு முன்னேறவும் உதவினார் ரஷீத் கான். சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையேயான போட்டியை விட, இந்த போட்டி கடைசி பந்து வரை மிக த்ரில்லாக சென்றது என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஹைதராபாத் அணியும், கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் எடுத்திருந்தது. அதே போல, குஜராத் அணியும் 4 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் எடுத்திருந்தது.
ஹைராபாத் அணியில், உம்ரான் மாலிக் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதில், 4 போல்டும் அடங்கும். மற்ற எந்த ஹைதராபாத் பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை எடுக்கவில்லை.
நடப்பு தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது, கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட, குஜராத் வீரர் டெவாட்டியா, இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி, ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8