"அவர விட நானே சூப்பரா பவுலிங் போடுவேன்.." பிராவோவை பங்கமா செஞ்ச தோனி.. "THUG LIFE குடுக்குறதுல தல தல தான்யா.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில், பாதிக்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
ஏறக்குறைய அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் சுற்று வாய்ப்பு இருப்பதால், எந்தெந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்.
அதே போல, அனைத்து அணிகளும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்புக்கு கடைசி வரை பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.
நெருக்கடியில் சிஎஸ்கே
இதில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், 8 போட்டிகள் விளையாடி 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. மீதமுள்ள 6 லீக் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டும் தான், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியும் சென்னை அணியை சூழ்ந்துள்ளது.
ஏற்கனவே பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் தடுமாறி வரும் சிஎஸ்கே, அணியிலுள்ள பிழைகளை திருத்திக் கொண்டு, களமிறங்கினால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும். சிஎஸ்கே தொடர் வெற்றிகளை குவித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.
பிராவோவை கலாய்த்த தோனி
முன்னதாக, கடந்த ஐபிஎல் சீசன் வரை சிஎஸ்கேவை வழிநடத்தி வந்த எம்.எஸ். தோனி, நடப்பு தொடருக்கு முன்பாக கேப்டன்சி பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால், அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்ட தோனி, பேட்டிங்கில் இந்த முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். களத்தில் மிக கூலாக இருக்கும் தோனி, மிகவும் ஜாலியாகவும் பேசக் கூடியவர். அந்த வகையில், பிராவோவை குறிப்பிட்டு, தோனி பேசிய வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், தோனி, பிராவோ மற்றும் ருத்துராஜ் ஆகியோர் இருக்க, சில போட்டோக்களை காட்டி, அதற்கு விளக்கங்கள் கேட்கப்படுகிறது. இதில், பிராவோவுடன் தான் இருக்கும் புகைப்படம் பற்றி தோனி கிண்டலாக சொன்ன விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
நானே நல்ல பவுலிங் போடுவேன்
"இத்தனை ஆண்டுகளில், நான் பிராவோவிடம் எப்படி பந்து வீச வேண்டும் என கூறியதே இல்லை. ஆனால், எப்படி பந்து வீசக் கூடாது என கூறியுள்ளேன். எப்படி வேண்டுமானாலும் பந்து வீசுங்கள். ஆனால், சில வேரியேஷன்களை முயற்சி செய்ய வேண்டாம் என கூறுவேன்.
சில நேரங்களில், பிராவோவின் ஓவரில் ரன்கள் செல்ல ஆரம்பிப்பதை பார்க்கும் போது, அவரிடம் கீப்பர் க்ளவ்ஸை கொடுத்து விட்டு, நான் பந்து வீசலாமா என்று கூட யோசித்துள்ளேன். அதை விட ஒன்றும் மோசமாக நான் நிச்சயம் பந்து வீச மாட்டேன்" என சிரித்துக் கொண்டே தோனி பதில் சொன்னார். இதைக் கேட்ட மற்றவர்களும் சிரித்த படி இருந்தனர்.
மிகவும் கலகலப்பாக தோனி சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருக்கும் இந்த வீடியோ, தற்போது அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8