"ஹர்திக் பாண்டியா மட்டும் இந்த மேட்ச்ல 50 அடிக்கட்டும்".. ஸ்டேடியத்தில் பெட் கட்டிய ரசிகர்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரசிகர் ஒருவர் வைத்திருந்த பதாகை பற்றி வைரலாக பேசி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
என்ன மைனா பேசுது?.. வைரலாகும் வீடியோ.. குழம்பிப்போன நெட்டிசன்கள்..!
ஏப்ரல் 11 (திங்கட்கிழமை) மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சமீப காலங்களில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய கில் 7 ரங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்துவந்த சாய் சுதர்ஷன் 11 ரன்னில் அவுட்டாக மற்றொரு துவக்க ஆட்டக்காரரான வேட் 19 ரங்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
பாண்டியா 50
இந்நிலையில், குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா பொறுமையுடன் ஆட துவங்கினார். ஆனால் அடுத்த பக்கத்தில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்துகொண்டே இருந்தன. பொறுப்பாக ஆடிய பாண்டியா அரை சதம் அடித்தார். அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே 50 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார் பாண்டியா. இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்தது குஜராத் அணி.
ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மேக்ரோ ஜான்சன் மற்றும் உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சேசிங்
இதனை அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டாக்காரர்களான அபிஷேக் ஷர்மா - வில்லியம்சன் ஜோடி நிதானமான துவக்கத்தை கொடுத்தது.
47 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்மா அவுட்டாக கொஞ்ச நேரத்தில் அரை சதமடித்த கையோடு பெவிலியன் திரும்பினார் வில்லியம்சன். ஆனாலும், அடுத்துவந்த பூரன் சிறப்பாக ஆடி அணியை வெற்றிபெற செய்தார். 19.1 வது ஓவரில் ஹைதராபாத் வெற்றி இலக்கை எட்டியது.
பதாகை
இந்நிலையில் இந்த போட்டியை காண வந்திருந்த ஒரு ரசிகர் வைத்திருந்த பதாகை பலரது கவனத்தை ஈர்த்தது. அந்த பதாகையில்," ஹர்திக் பாண்டியா 50 ரன்கள் எடுத்தால், நான் என்னுடைய வேலையை ராஜினாமா செய்கிறேன்" என எழுதப்பட்டு இருந்தது.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 50 ரன்கள் அடிக்கவே, நெட்டிசன்கள் அந்த பதாகை வைத்திருந்த நபர் குறித்து கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். " குஜராத் அணி ஒருவரின் வேலையை பறித்துவிட்டது" என்றும் "வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதற்கு இதுதான் காரணம்" என்றும் சமுக வலைதள வாசிகள் கமெண்ட் அடித்துவருகிறார்கள்.
"உழைச்சவங்களுக்கு நல்லது செய்யணும்".. 100 ஊழியர்களுக்கு பிரபல நிறுவனர் அளித்த நெகிழ்ச்சி பரிசு..!