மிடில் ஆர்டருல 'அவரு' இருந்துருந்தா 'மேட்ச்' வேற மாதிரி இருந்துருக்கும்...! இணையத்தில் கொந்தளித்த SRH ரசிகர்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று (14-04-2021) நடந்த பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்ததற்கு அணி தேர்வு என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நேற்று (14-04-2021) ஹைதராபாத் வெற்றிபெற நல்லதொரு வாய்ப்பு இருந்தும் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது. ஹைதராபாத்தை அணியின் மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று ஆட கூடிய வீரர்கள் இல்லை என்பதால் தான் தோல்வி அடைந்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
நேற்று ஹைதராபாத் அணியில் நபிக்கு ஹோல்டர் எடுக்கப்பட்டார். ஆனால் இவர் கடைசி வரை நிலையாக நின்று ஆட கூறிய வீரர் கிடையாது. ரஷீத் கானும் அதிரடியாக விளையாடுவார் என்றாலும் நீண்ட நேரம் களத்தில் நிற்பது கடினம்.
நேற்றைய போட்டியில் ஹோல்டருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் எடுக்கப்பட்டு இருந்தால் ஹைதராபாத் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர். வில்லியம்சன் பல போட்டிகளில் ஹைதராபாத் அணியை கடைசி நொடியில் 'ஆன்கர்' இன்னிங்ஸ் ஆடி தோல்வியில் இருந்து மீட்டுள்ளார்.
ஆனால் வார்னர் வில்லியம்சன் இன்னும் ரெடியாகவில்லை. அதனால் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். வில்லியம்சனை புறக்கணித்ததனால் தான் தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிராக திரும்பி உள்ளது என ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.
We believe in You Captain. Bring back Kane mama into playing 11 🧡🔥. #KaneWilliamson https://t.co/VATXw8tjXJ
— Vemunurisaideep 🇮🇳 (@saideep1501) April 15, 2021
ஆனால் கடந்த வருடங்களிலும் முதல் ஒரு சில போட்டிகள் விளையாடாமல் அதற்கு பின்னரே வில்லியம்சன் களம் இறங்குவார். வெளிநாட்டு வீரர்கள் சுழற்சி முறையில் விளையாடுவது வழக்கம். வில்லியம்சன் ஆட தொடங்கியபின் தொடர்ச்சியாக விளையாடுவார். எனவே தோல்வியின் காரணமாக ரசிகர்கள் இப்படியொரு கருத்தையும் முன்வைப்பதாக பார்க்க முடிகிறது.
Kiska hai yeh tumko intezaar,
Main hoon Na #SRHvsRCB pic.twitter.com/5ra0ZlUt90
— Virender Sehwag (@virendersehwag) April 14, 2021
Kiska hai yeh tumko intezaar,
Main hoon Na #SRHvsRCB pic.twitter.com/5ra0ZlUt90
— Virender Sehwag (@virendersehwag) April 14, 2021
SRH always takes a few matches to realise that Kane Williamson can't be benched.
— Heisenberg ☢ (@internetumpire) April 14, 2021