இனி 'உங்களுக்கெல்லாம்' இதுவே போதும்... 'பிசிசிஐ' எடுத்த திடீர் முடிவு... ஏன் இப்டி? ஷாக்கான அணிகள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 04, 2020 07:21 PM

ஐபிஎல் போட்டிகளின் பரிசுத்தொகையை பாதியாக குறைத்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

BCCI reduces IPL Prize money by Half, Details Here

13-வது ஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் 29-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகின்றன. முதல் போட்டியில் மும்பை-சென்னை அணிகள் மோதுவதால் எக்கச்சக்க எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத்தொகையை பிசிசிஐ பாதியாக குறைத்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாவது இடம் பிடித்த  அணிக்கு ரூபாய் 12.5 கோடியும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூபாய் 8.75 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டு இருப்பதால் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 10 கோடியும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 6.25 கோடி ரூபாயும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு ரூபாய் 4.375 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. அதே நேரம் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் ரூபாய் 1 கோடி வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.