"நீயே மாப்பிள்ளை தேடிக்கோ.." பெண் ரசிகை கொண்டு வந்த பேனர்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு வந்த 'PROPOSAL'..
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் சீசனில், தற்போது நடைபெறும் வரும் 30 ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தது.
அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 103 ரன்கள் எடுத்திருந்தார். இந்த சீசனில், அவர் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். தொடர்ந்து, இலக்கை நோக்கி தற்போது கொல்கத்தா அணி ஆடி வருகிறது. இதனிடையே, கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வேண்டி, ரசிகை ஒருவர் கொண்டு வந்த பேனர் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
நடப்பு சீசனில் 'KKR'
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடி வந்த ஷ்ரேயாஸ் ஐயரை அந்த அணி ஏலத்திற்கு முன்பாக விடுவித்திருந்தது. தொடர்ந்து, இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, 12.25 கோடி ரூபாய் கொடுத்து, அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
அது மட்டுமில்லாமல், கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாகவும் ஷ்ரேயாஸ் ஐயரை அணி நிர்வாகம் நியமித்திருந்தது. தற்போதைய ஐபிஎல் தொடரில் சிறந்த அணிகளில் ஒன்றாக வலம் வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இதுவரை 6 போட்டிகளில் ஆடி, அதில் மூன்றில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடமும் வகிக்கிறது.
ரசிகை கொண்டு வந்த பதாகை
தொடர்ந்து, தங்களின் 7 ஆவது போட்டியில் தற்போது ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான், கொல்கத்தா போட்டியைக் காண வந்த ரசிகை ஒருவர் வைத்துள்ள பதாகையிலுள்ள வாசகம், தற்போது அதிகம் வைரலாக பரவி வருகிறது.
Marriage Proposal..
இது தொடர்பான ட்வீட் ஒன்றை, கொல்கத்தா அணியே தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பெண் ரசிகை வைத்துள்ள பதாகையில், "என்னுடைய திருமணத்திற்காக ஒருவரை நானே தேடி கண்டுபிடிக்குமாறு எனது அம்மா கூறியுள்ளார். ஆகவே என்னை திருமணம் செய்து கொள்வீர்களா ஷ்ரேயாஸ் ஐயர்?" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பகிர்ந்த கொல்கத்தா அணி, "That's one way of shooting your shot!" என தங்களின் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்பாக, பெங்களூர் அணியின் ரசிகை ஒருவர், "ஆர்சிபி கோப்பையைக் கைப்பற்றும் வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்" என எழுதி, மைதானத்தில் கொண்டு வந்திருந்த பதாகை ஒன்றும், மிகப் பெரிய அளவில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.