ஒரே 'ஓவரில்' இரண்டு 'விக்கெட்'டுகள் எடுத்த 'பவுலர்',,.. ஆனாலும், 'போட்டி'யின் பாதியில் வெளியேறிய 'அதிர்ச்சி'... 'ஷாக்' ஆன ரசிகர்கள்... காரணம் என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில், டெல்லி அணியை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் ஆட்டத்தின் பாதியில் இருந்து விலகியுள்ளார்.

158 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி ஆடிய நிலையில், ஆறாவது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே கருண் நாயர் ஆட்டமிழந்த நிலையில், அதே ஓவரில் பூரான் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினார். தொடர்ந்து, அந்த ஓவரில் இறுதி பந்தை அஸ்வின் மேக்ஸ்வெல்லிற்கு வீசினார்.
அப்போது மேக்ஸ்வெல் அடித்த பந்தை அஸ்வின் பாய்ந்து தடுக்க முயன்ற போது, அவரது இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவர் போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவர் காயம் குறித்து எந்த அறிவிப்பையும் டெல்லி அணி நிர்வாகம் வெளியிடவில்லை. உறுதியான தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவராத பட்சத்தில், சற்று காயத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அடுத்த இரண்டு, மூன்று போட்டிகளில் அஸ்வின் ஆட முடியாமல் போகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
Ashwin has gone off the field injured 😓
We really hope this isn't too serious 🤞🏻
KXIP - 35/3 (6.2 overs)#DCvKXIP #Dream11IPL #IPL2020 #YehHaiNayiDilli
— Delhi Capitals (Tweeting from 🇦🇪) (@DelhiCapitals) September 20, 2020
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியிருந்த நிலையில், அவரது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது டெல்லி அணி ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
