”அவங்களுக்கு நான் தேவை… இந்த TEAMS-காக CUP அடிக்கணும்”… ஐபிஎல் ரி எண்ட்ரி பற்றி கிறிஸ் கெய்ல் UPDATE!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான கெய்ல் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என நம்பிக்கை அளித்துள்ளார்.
கெய்ல் இல்லாத ஐபிஎல்..
டி 20 கிரிக்கெட்டின் சாதனையாளர்களில் ஒருவரும் யூனிவர்ஸல் பாஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான கிறிஸ் கெய்ல் ஐபிஎல் கிரிக்கெட்டின் மிக முக்கியமான எண்டர்டெயினர்களில் ஒருவர். கொல்கத்தா, ஆர் சி பி மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடிய இவர் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அவரை இந்த ஆண்டு எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இது ரசிகர்களுக்கு மிக அதிர்ச்சியான செய்தியாக அமைந்தது. 2009 ஆம் ஆண்டு முதல் கெய்ல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த நிலையில் அவர் இல்லாத ஐபிஎல் தொடர் தற்போது நடந்துவருகிறது.
ஐபிஎல் ரிட்டர்ன்…
இதையடுத்து தற்போது கெய்ல் ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் ”அடுத்த வருடம் நான் திரும்பி வருகிறேன், அவர்களுக்கு(BCCI) நான் தேவை! நான் ஐபிஎல் தொடரில், கொல்கத்தா, RCB மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளுக்காக விளையாடியுள்ளேன். RCB மற்றும் பஞ்சாப் இடையே, அந்த இரண்டு அணிகளில் ஏதாவது ஒரு அணிக்காக விளையாடி கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறேன். நான் RCB அணியில் சிறப்பாக விளையாடினேன். நான் சவால்களை விரும்புகிறேன், அதனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.” எனக் கூறியுள்ளார்.
யூனிவர்ஸல் பாஸ்
யூனிவர்ஸல் பாஸ் என செல்லமாக அழைக்கப்படும் கெய்ல், ஐபிஎல் தொடரில் இதுவரை 142 போட்டிகளில் விளையாடி, 4965 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 6 சதங்களும் 31 அரை சதங்களும் அடங்கும். ஐபிஎல் தொடரில் 357 சிக்ஸர்களை விளாசி, அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் ஆளாக உள்ளார். அவரின் சராசரி 39.72. தற்போது 42 வயதாகும் கெய்ல் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு வருவேன் எனக் கூறியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் ஆசைப்படி அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க முன்வருமா என்பது சந்தேகத்துக்குரிய ஒன்றுதான்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8