"இப்டி எல்லாம் என்னைக்கி 'தல' பண்ணி இருக்கீங்க??.." 'தோனி' செயலால் விரக்தி அடைந்த 'தீபக் சாஹர்'.. வைரலாகும் 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் நேற்று மோதிய போட்டியில், சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 171 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே அரை சதமடித்த நிலையில், வில்லியம்சன் கடைசி ஓவர்களில் அதிரடி காட்டியிருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான கெய்க்வாட் மற்றும் டுபிளஸ்ஸி ஆகியோர், எந்தவித நெருக்கடியும் இன்றி ஆடி அசத்தினர்.
இதனால், 19 ஆவது ஓவரில் இலக்கிய எட்டிய சிஎஸ்கே அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதனிடையே, ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த போது, முதல் ஓவரை தீபக் சாஹர் (Deepak Chahar) வீசினார். அப்போது, ஓவரின் இரண்டாம் பந்தை பேர்ஸ்டோ (Bairstow) எதிர்கொண்டார். இந்த பந்து, அவரது பேட்டில் பட்டு, லெக் சைடு பக்கமாக கீப்பர் தோனியின் கைக்குச் சென்றது.
ஆனால், இந்த எளிய கேட்சை தோனி நழுவ விட்டார். இந்த சீசனில், ஆரம்பத்தில் இருந்தே அதிரடியுடன் ஆடக் கூடிய வீரராக வலம் வந்த பேர்ஸ்டோவின் கேட்சை தோனி தவற விட்டதும், சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கீப்பிங்கில் பட்டையைக் கிளப்பும் தோனி, கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற எளிய கேட்ச் ஒன்றையும் தவற விட்டதில்லை.
— pant shirt fc (@pant_fc) April 29, 2021
தோனி (Dhoni) கேட்சைத் தவற விட்டதும், பந்து வீச்சாளர் தீபக் சாஹர், அதிக விரக்தியுடன் காணப்பட்டார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும், இதுகுறித்த கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
Chahar looking angrily at Dhoni after taking that catch ? 😂😂😂#IPL2021
— RO45 FAN - #HHVM ( Sankranthi 2022 ) (@forpspk2) April 28, 2021
What?! Ms Dhoni dropped Johnny Bairstow's catch on very first Ball of Deepak Chahar. #IPL2021
— CricketMAN2 (@man4_cricket) April 28, 2021
முதல் பந்திலேயே பேர்ஸ்டோவிற்கு அதிர்ஷ்டம் கிடைத்த போதும், சாம் குர்ரான் பந்து வீச்சில் 7 ரன்களிலேயே அவுட்டாகி, நடையைக் கட்டியது குறிப்பிடத்தக்கது.