"ஜஸ்ட் ஒரு ஷாட்.. ஆனா, அந்த ஒரு 'அடி'லயே மரண பயத்த 'காட்டிட்டு போய்ட்டாரு.." 'கேதார் ஜாதவ்' செய்த 'சம்பவம்'.. மெர்சலான 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Apr 28, 2021 09:56 PM

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பிடித்து, தொடரில் இருந்து வெளியேறியிருந்தது.

kedar jadhav hits six in last ball against csk gone viral

அந்த அணியிலுள்ள வீரர்கள் சிலரின் ஆட்டம் கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்தது. அதிலும் குறிப்பாக, இந்திய பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ் (Kedar Jadhav), ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடவில்லை. இருந்த போதும், சிஎஸ்கே கேப்டன் தோனி, தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தார். என்ற போதிலும், பெரிய அளவிலான ஆட்டத்தை கேதார் ஜாதவ் வெளிப்படுத்தவில்லை.

மிகவும் அதிகமான விமர்சனங்களை கேதார் ஜாதவ் சந்தித்த நிலையில், அவரை அதிகம் ட்ரோல் செய்து மீம்ஸ்களும் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு முன்பான ஏலத்தில், கேதார் ஜாதவை சென்னை அணி விடுவித்திருந்தது. அதன் பிறகு, ஜாதவை ஹைராபாத் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த நிலையில், வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே இணைந்து, ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். இறுதியில், வில்லியம்சன் அதிரடி காட்டினார். இதனிடையே, கடந்த சீசனில், தான் ஆடிய அணிக்கு எதிராக இன்று களமிறங்கிய கேதார் ஜாதவ், தனக்கு கிடைத்த 4 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்தார்.

கடந்த சீசனில், சென்னை அணிக்காக ஒரு சிக்ஸரை கூட அடிக்காத கேதார் ஜாதவ், சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியின் கடைசி பந்தில் அடித்த சிக்ஸர், இந்த சீசனின் சிறந்த சிக்ஸர்களில் ஒன்றாக அமைந்தது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதே போல, கேதார் ஜாதவின் சிக்ஸரை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள், தற்போது எப்படி இருப்பார்கள் என்பது போன்ற மீம்ஸ்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kedar jadhav hits six in last ball against csk gone viral | Sports News.