“இந்த சீசனில் சிஎஸ்கேவின் முதல் தோல்வி இவங்களோடதான்!”.. இன்று மீண்டும் பலப்பரீட்சை! வெல்லுமா வியூகம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Oct 19, 2020 10:46 AM

இன்று இரவு நடைபெற உள்ள ஐபிஎல் சீசன் 13ன் 37வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

CSKvsRR 37th match of IPL2020 in UAE ஐபிஎல் சென்னை VS ராஜஸதான்

ஐபிஎல் தொடர்களில் இதுவரை இந்த 2 அணிகளும் 22 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் சென்னை 14 முறையும், ராஜஸ்தான் 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக மோதிய 10 ஆட்டங்களில் சென்னை 7 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றன. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் செப்.22ம் தேதி நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டிதான் நடப்புத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடைந்த முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் தொடரில் நடந்த 9 போட்டிகளில் சென்னை 6 போட்டிகளில் தோற்றதுடன் 3 போட்டிகள் வென்றது. இதேபோல் ராஜஸ்தான் அணி ஆடிய 9 போட்டிகளில் 6ல் தோற்றுள்ளதும், 3ல் வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் வெற்றி, தோல்வி அளவில் இந்த தொடரில் சம அளவுள்ள 2 அணிகள் இன்று பலப்ப்ரீட்சை நடத்துகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CSKvsRR 37th match of IPL2020 in UAE ஐபிஎல் சென்னை VS ராஜஸதான் | Sports News.