'CSK ரசிகர்கள்... இத்தன நாளா எதிர்பார்த்து காத்திருந்தது'... 'அடுத்த மேட்ச்சிலேயே நடக்கலாம்!!!'... 'அணியில் நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியில் பிராவோ விளையாட முடியாத அளவிற்கு காயம் அடைந்துள்ளதால் அடுத்த போட்டியில் அவருடைய இடத்தில் யார் விளையாடப் போகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே சிஎஸ்கே வீரர்கள் ரெய்னா மற்றும் ஹர்பஜன் இருவருமே தொடரில் இருந்து வெளியேறினர். இதையடுத்து சிஎஸ்கே அணிக்குள் டு பிளசிஸ் நிரந்தர வீரராக மாற, வாட்சனும் அணிக்கு முக்கியமான ஓப்பனிங் வீரராக மாறினார். அதோடு சாம் கரன் பவுலிங்கும், பீல்டிங்கும் செய்து வருகிறார். இந்நிலையில், முன்னதாக சிஎஸ்கே அணிக்குள் பிராவோவின் இடம் மட்டுமே கேள்விக்குறியாக இருந்தது. அவர் சிறப்பாக டெத் ஓவர்களில் பவுலிங் செய்து வந்ததாலும், தேவையான நேரங்களில் பேட்டிங்கும் செய்வார் என்பதாலும் பிராவோவை அணியில் இருந்து நீக்குவார்களா என்ற சந்தேகம் வந்தது. மேலும் கரண் சர்மா, சாவ்லா இரண்டு பேருமே சரியாக ஸ்பின் பவுலிங் செய்யாததால் சிஎஸ்கே அணியில் இம்ரான் தாஹிரை கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
ஆனால் அணியில் பிராவோ இருப்பதால் தாஹிரை கொண்டு வர முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில்தான் தற்போது பிராவோ விளையாட முடியாத அளவிற்கு காயம் அடைந்துள்ளதால் அடுத்த போட்டியில் பிராவோவின் இடத்தில் தாஹிர் விளையாட வாய்ப்புள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய போட்டியில் பிராவோ காயம் காரணமாக பாதியில் வெளியேற, அவர் மீண்டும் விளையாட இன்னும் 2 வாரம் கூட ஆகும் என பிளமிங் தெரிவித்துள்ளதால் நாளை அணிக்குள் இம்ரான் தாஹிர் விளையாடலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு சீசன்களில் தாஹிரும் சிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்தார் என்பதால் நாளை ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் அணிக்குள் வந்தால் அணி வெற்றி வாய்ப்பு அதிகரிக்குமென பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.