"எல்லாமே நல்லா தான் போயிட்டிருந்தது... திடீர்னு அவர தூக்கியிருக்கக் கூடாது?!!" - 'கடும் அழுத்தத்திற்கு உள்ளான பிரபல தமிழக வீரர்'... 'கொந்தளித்த முன்னாள் கிரிக்கெட்டர்!!!'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன்சி தினேஷ் கார்த்திக் விலகியதையடுத்து இயன் மோர்கனிடம் கொடுக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் திடீரென போட்டிகளுக்கு இடையில் கேப்டன் பதவிலியிருந்து தினேஷ் கார்த்திக் விலகியதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன்சி இயன் மோர்கனிடம் கொடுக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், பேட்டிங்கில் கவனம் செலுத்தப் போவதாக கூறி கேப்டன்சியிலிருந்து விலகுகிறேன் என கார்த்திக் தெரிவித்துள்ளபோதும் அவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், "கிரிக்கெட் என்பது உறவுகள் பற்றியதல்ல, அது ஆட்டத்திறன் பற்றியது. மோர்கனால் பெரிய அளவில் எல்லாம் எதையும் மாற்றி விட முடியாது. தொடரின் ஆரம்பத்திலேயே மோர்கனிடம் கேப்டன்சியை அளித்திருந்தால் ஏதாவது செய்திருக்க முடியும். தொடரின் நடுவில் யாரும் கேப்டனை மாற்ற மாட்டார்கள். 2 ஆண்டுகளாக தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கிறார், நட்டநடுவில் அவரை மாற்றுவார்களா? கேகேஆர் அணி கேப்டனை மாற்றும் அளவுக்கு அவ்வளவு மோசமாகவும் இல்லை. எனவே இந்த மாற்றம் எனக்கு ஆச்சரியமளிக்கிறது.
கேகேஆர் கேப்டனை மாற்ற வெண்டுமென்றால் தொடரின் ஆரம்பத்திலேயே மாற்றியிருக்க வேண்டும். உலகக்கோப்பை வென்ற கேப்டன் (மோர்கன்) நம்மிடையே இருக்கிறார் என்பதற்காக அதிகம் பேசிப் பேசி தினேஷ் கார்த்திக் போன்ற ஒருவருக்கு நெருக்கடி கொடுப்பதா? நேரடியாக மோர்கனிடம் அளிக்க வேண்டியதுதானே? ஏன் கார்த்திக்கிற்கு அதிக நெருக்கடி அளிக்க வேண்டும்? அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புகிறேன் எனக் கூறுவது நல்ல விஷயம்தான். ஆனால் உண்மை என்னவெனில் அணி நிர்வாகம் கார்த்திக் மீது திருப்தியாக உள்ளார்களா இல்லையா என்ற தகவல் அவருக்கு கிடைத்திருக்கும். எனவே இது துரதிர்ஷ்டவசமானது" எனக் காட்டமாக கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
