“ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஆட்டம்!”.. ‘கடைசி பந்தில் ரன் அவுட்’.. ‘2வது சூப்பர் ஓவர்’ என ‘பரபரப்புடன்’ வென்ற ‘ஐபிஎல்’ அணி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்கத்தில் மும்பை அணியின் பேட்டிங் வரிசை மோசமாக செயல்ட, பின்னர் டி காக், 43 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 16.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணியில் அப்போது களத்தில் இருந்த பொல்லார்டும், ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நைலும் சேர்ந்து தெறிக்கவிட்டனர்.
நாதன் கோல்டர் நைல் 12 பந்துகளில் 24 ரன்களும், பொல்லார்டு 12 பந்துகளில் 34 ரன்களும் சேர்த்தனர். மொத்தமாக பொல்லார்டு - நாதன் கோல்டர் நைல் ஜோடி 21 பந்துகளில் 57 ரன்கள் குவித்ததை அடுத்து மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து ஆடிய பஞ்சாப் அணியும் சளைக்காமல், தொடங்கியது. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். கிறிஸ் கேய்ல் 21 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர். இதனால் கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் என்கிற இலக்கை வந்தடைந்து பின்னர் ஜோர்டனின் ரன் அவுட்டால் போட்டி சமனில் முடிந்தது. அதன் பின்னர் நடந்த சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது.
இறுதியாக நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து ஆடியதால் ஐபிஎல் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து கே.எல்.ராகுல் சாதனை படைத்துள்ளார்.